spot_img
HomeNewsஅறுவை சிகிச்சை நிபுணரான தீரஜ் போதை எறி புத்தி மாறி' மூலம் நடிகராகஅறிமுகம்

அறுவை சிகிச்சை நிபுணரான தீரஜ் போதை எறி புத்தி மாறி’ மூலம் நடிகராகஅறிமுகம்

போதை ஏறி புத்தி மாறி நடிகர் தீரஜ் –

புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணரான தீரஜ், அவரது மகத்தான தொழில் சாதனைகளுக்காக பாராட்டப்பட்டவர். தற்போது ‘போதை எறி புத்தி மாறி’ மூலம் ஒரு நடிகராக திரையுலகில் அறிமுகமாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறார். குறிப்பாக காட்சி விளம்பரங்களில் அவரது நடிப்பும் மற்றும் ‘விர்ஜின் ஸ்டோனர் ‘பாடலில் அவரது தோற்றம் மற்றும் நடனமும் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்திருக்கிறது. இவை எல்லாம் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) வெளியாக உள்ள இந்த படத்தில் அனைத்து அம்சங்களும் நிச்சயம் இருக்கும் என்பதை உறுதி செய்துள்ளது.

இது குறித்து நடிகர் தீரஜ் கூறும்போது, “உண்மையைச் சொல்வதானால், அத்தகைய வரவேற்பைப் பற்றி எனக்கு முழுமையாகத் தெரியவில்லை, நேர்மறையான வரவேற்பை காண நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். அதே நேரத்தில் பார்வையாளர்கள் எனது நடிப்பை எவ்வாறு எடுத்து கொள்வார்கள் என்ற ஒரு பதட்டம் எனக்குள் உள்ளது. ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் என்பது எனக்கு நல்ல அடையாளத்தை அளித்திருக்கிறது என்று நான் கூறமாட்டேன். நான் வித்தியாசமான ஒன்றை முயற்சிக்க விரும்பினேன், என் பள்ளி நாட்களிலிருந்தே நடிப்பதில் ஆர்வம் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. போதை ஏறி புத்தி மாறி படம் மூலம் எனது நீண்டகால கனவு மட்டுமல்ல, அணியில் உள்ள எனது நண்பர்களின் கனவுகளும் நிறைவேறி உள்ளது. சந்துரு பல ஆண்டுகளாக என் நண்பராக இருந்து வருகிறார், மேலும் திரைப்படத்தின் மீதான அவரது ஆர்வத்தை நான் அறிவேன். நாங்கள் சில குறும்படங்களில் ஒன்றாக வேலை செய்திருக்கிறோம். எங்கள் திறமையின் மீது சிறிது நம்பிக்கை வந்த பிறகு, ஒரு முழு நீள திரைப்படத்தை உருவாக்க முடிவு செய்தோம்” என்றார்.

கதை எழுத தொடங்கியதிலிருந்து இறுதி வடிவம் வரை போதை ஏறி புத்தி மாறி திரைப்படம் நடிகர் தீரஜ்க்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. அது குறித்து அவர் கூறும்போது, “இயற்கையாகவே, எந்த ஒரு படக்குழுவும் அவர்களின் படத்தை பொறுத்தவரை இந்த மாதிரி தான் உணர்வார்கள். ஆனால் எங்களைப் போன்ற புதியவர்களுக்கு, ஒவ்வொரு நடிகரும், தொழில்நுட்ப கலைஞரும் சேர்ந்து படம் படிப்படியாக உருவானதை பார்ப்பது, எங்கள் படம் ஒவ்வொரு நாளும் அழகான அலங்காரங்களுடன் வடிவமைக்கப்படுவதை போன்று இருந்தது” என்றார்.

அவரது சக நடிகர்களைப் பற்றி கூறும்போது, “அவர்களில் பெரும்பாலோர் என்னை விட அனுபவமுள்ளவர்கள். பிரதாயினி, துஷாரா, அர்ஜுன் உட்பட அவர்கள் பலரும் மிக நீண்ட காலமாக கேமரா முன் நடித்து வருகிறார்கள். அவர்களின் நம்பிக்கை மிகவும் வலுவானது. எல்லோரும் பொறுமையாகவும் ஆதரவாகவும் இருந்தார்கள் என்று நான் சொல்ல முடியும். பாலசுப்ரமணியம் சார் மட்டும் இல்லையென்றால், நிச்சயம் இது சாத்தியமில்லை. எங்கள் முழு படத்தையும் வடிவமைப்பதில் அவர் முக்கிய முதுகெலும்பாகவும் வழிகாட்டியாகவும் இருந்துள்ளார். கே.பி. மற்றும் படத்தின் ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞரும் தூண்களாக இருந்திருக்கிறார்கள்” என்றார்.

ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ள இப்படத்தில் தீரஜ், பிரதாயினி மற்றும் துஷாரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, ராதாரவி, சார்லி, அர்ஜுன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். கே.பி. இசையமைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img