spot_img
HomeCinema Reviewகொரில்லா விமர்சனம்

கொரில்லா விமர்சனம்

ஜீவா ஷாலினி பாண்டே சதீஷ் விவேக் பிரசன்னா யோகி பாபு மற்றும் பலர் நடிக்க விஜய ராகவேந்திரா தயாரிப்பில் டான் சாண்டி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் கொரில்லா சரி கதைக்கு வருவோம் இவங்க கூட  ஒரு கொரில்லாவும் நடிச்சி இருக்கு

பஸ்ஸில் டிக்கெட் எடுத்து தருவது பஸ்சில் டிக்கெட் எடுத்து தருவதுபோல் திருடுவது போலி டாக்டராக நடித்து பணத்தை சுருட்டுவது இப்படி பல திருட்டுக்களை செய்யும் ஜீவா

சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலையிழந்த சதீஷ்,

சினிமாவில் நாயகனாக நடிக்க வேண்டும் ஆசையில் விவேக் பிரசன்னா

இவர்களின் பணத் தேவைக்காக கொள்ளை அடிப்பதை பற்றி டாஸ்மார்க்கில் உட்கார்ந்து பேசும்போது பக்கத்து வீட்டுக்காரர் ஒட்டுக் கேட்டு தானும் அந்த கொள்கையில் இணைத்துக் கொள்கிறார்

ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் ஒரு வங்கியில் கொள்ளை அடிக்க அனைவரும் முயற்சி செய்கின்றனர் அங்கே பணம் குறைவாக இருப்பதால் பேங்குக்கு வரும் வாடிக்கையாளர்களை பிணைய கைதியாக வைத்துக்கொண்டு அரசாங்கத்திடம் 20 கோடி ரூபாய் பிணையத் தொகையாக கேட்கின்றனர் பின்னர் விவசாய கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர் அரசாங்கம் இவர்கள் கோரிக்கையை ஏற்றதா என்பதே மீதிக்கதை 

 

காமெடி படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இயக்குனர் இந்த கதை எடுத்திருக்கிறார் ஆனால் சிரிப்பு வர வைக்க நம்மையும் நடிகர்களையும் மிகவும் கஷ்டப்படுத்தி இருக்கிறார் ஆனால் விவசாய கடன் தள்ளுபடி இந்த பிரச்சினையை கையில் எடுத்து படம் பார்க்கும் ரசிகனிடம் பாராட்டுகளை அள்ளிக் கொள்கிறார்

 

படத்தில் ஜீவா மிகவும் துடிதுடிப்பான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மீண்டும் பழைய ஜீவாவை இப்படத்தில் பார்க்க முடிகிறது
தான் பேசுவதெல்லாம் காமெடி என்று நினைத்துக் கொண்டிருக்கும் சதீஷ்க்கு அது காமெடி இல்லை என்பதை யாராவது புரிய வைத்தால் வரும் காலங்களில் அவர் வளர்ச்சிக்கு நன்றாக இருக்கும் யோகி பாபு அவருக்குரிய பாணியில் சிறப்பாக செய்திருக்கிறார்
., விவேக் பிரசன்னா, விவசாயியாக வரும் மதன்குமார் என அனைவரும் அவர்கள் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள் நாயகி ஷாலினி பாண்டேவிற்கு படத்தில் பெரிய கதாபாத்திரம் இல்லை என்றாலும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.
குருதேவின் ஒளிப்பதிவு,  படத்தைத் தூக்கி நிறுத்துகின்றன.சாம் சி.எஸ். பின்னணி இசை பாடல்கள் சுமார் ரகம் தான்.
கொரில்லா  – விவசாய புரட்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img