spot_img
HomeNews*ட்ரெய்லர் போல படமும் பிடித்திருந்தால்' சூப்பர் டூப்பர்' படத்தை வாங்கி வெளியிடுவேன் : தயாரிப்பாளர்  லிப்ரா...

*ட்ரெய்லர் போல படமும் பிடித்திருந்தால்’ சூப்பர் டூப்பர்’ படத்தை வாங்கி வெளியிடுவேன் : தயாரிப்பாளர்  லிப்ரா ரவீந்திரன் பேச்சு!*

தயாரிப்பாளர்கள் விமர்சனங்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்று தயாரிப்பாளர் டி. சிவா ‘ சூப்பர் டூப்பர்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு:
ஃப்ளக்ஸ் பிலிம்ஸ் சார்பில், இயக்குநர் ஏகே இயக்கத்தில் துருவா , இந்துஜா  நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சூப்பர் டூப்பர்’. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.
 விழாவில் இயக்குநர்  ஏகே , நாயகன் துருவா, நாயகி இந்துஜா, நடிகர் ஷாரா, ஆதித்யா ,  படத்தின் ஒளிப்பதிவாளர்கள் தளபதிரத்னம், சுந்தர்ராம், இசை அமைப்பாளர் திவா கரா  தியாகராஜன், கலை இயக்குநர் சூர்யா, படத்தொகுப்பாளர் வேல்முகன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
 விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் ஜே.எஸ்.கே. சதீஷ்குமார், லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்திரன் ,அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் இயக்குநர் அருண் கார்த்திக் என்கிற  ஏ.கே. பேசும்போது ,
 “இது என் 15 ஆண்டு காலக் கனவு. நான் இங்கே சிரமப்பட்டு வந்தேன் என்று சொல்வதைவிட பலரைச் சிரமப்படுத்தி -கஷ்டப்படுத்தி வந்திருக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும்.  இதை ஒரு சாதாரண காமெடி படமாகத்தான்  ஆரம்பித்தோம் .ஆனால் அப்படியே இருக்கக்கூடாது என்று யோசித்தோம்.பலவித வண்ணங்களையும் வாசனைகளையும் கலந்து இதை வேறு வகையான படமாக உருவாக்கி இருக்கிறோம். இதில் பலரது உழைப்பு இருக்கிறது .ஒரு புதிய படக்குழு செப்துள்ள புதிய முயற்சி இது .ஊடகங்கள் ஆதரவு தர வேண்டும் .பொதுவாகக் கண்டிப்பவர்களை யாருக்கும் பிடிக்காது அப்பாவாக இருந்தாலும் சரி அம்மாவாக இருந்தாலும் சரி. ஆனால் ஊடகங்கள்தான் கண்டிக்கிறபோதும்  நண்பர்களாக இருப்பவர்கள் . இப்படத்திற்கு அவர்களின் ஆதரவு வேண்டும்” என்றார் .
ஒளிப்பதிவாளர் தளபதி ரத்னம் பேசும்போது , “இந்த மேடையில் நான் நிற்பதற்கு பல மனிதர்கள் காரணமாக இருந்திருக்கிறார்கள். இப் படத்தின் போது பல மனிதர்களுடன் பழகும் வாய்ப்பைப்
 பெற்றிருக்கிறேன் . ஒன்பது  ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வாய்ப்பு வந்துள்ளது. இதில்பலரும் உழைத்திருக்கிறார்கள் “என்றார்.
 இசையமைப்பாளர் திவாகரா தியாகராஜா பேசும்போது,
” ஐந்தாண்டு பயணத்தில் வந்த படம் இது. நான் ஐடியில் வேலை பார்த்து வந்தேன். வாய்ப்புக்கான போராட்டத்தில் முடியாமல் மீண்டும் திரும்பிச்சென்று சென்று விடலாம் என்று இருந்தவன் .என்னை ஏகே தான் பிடித்து இழுத்து  மீண்டும் அழைத்து வந்தார்.   குறும்பட முயற்சிகள் என்று செய்தோம். அது இந்த படம் வரை வந்து இருக்கிறது ” என்றார்.
நாயகன் துருவா பேசும்போது,
 ” இயக்குநர் ஏ .கே  ஒன்மேன் ஷோ வாக பலவற்றை படத்தில் செய்திருக்கிறார். 90 களில் சிம்ரன் இருந்த மாதிரி கவர்ச்சியாகவும் இருந்து நடிப்பையும் கொடுத்திருக்கிறார் இந்துஜா .  இதில் எங்களுடன் இணைந்து நடித்திருக்கும் ஷாரா ,ஆதித்யா நல்ல பெயர் பெறுவார்கள். ஒரு படத்திற்குக் கதை தான் முக்கியம் என்றாலும் விநியோகம் மிக முக்கியம் என்று இப்போது மாறியிருக்கிறது. இன்று சின்ன படம் பெரிய படம் என்றில்லை . வெற்றிப்படம் தோல்விப்படம் என்று மட்டுமே பேசப்படுகிறது. இந்த படத்திற்கு ஆதரவு தாருங்கள்.” என்றார்.
தயாரிப்பாளர் சதீஷ்குமார் பேசும்போது,
” இப்படத்தின் பாடல்கள் ட்ரெய்லரைப் பார்க்கும் போது யார் ஒளிப்பதிவாளர் ? யார் இசையமைப்பாளர் ? என்று தேடிப் பிடித்துப் பாராட்டத் தோன்றியது.
இன்று சினிமா எடுக்கும் போது அதன் வியாபார சாத்தியங்களை வெளியீட்டு விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இதற்கு உதவ நானும் தயார். அனுபவமுள்ள மூத்த தயாரிப்பாளர்களும் தயாராக இருக்கிறார்கள்.” என்றார்.
 நாயகி இந்துஜா பேசும்போது,
” இந்தப் படக்குழு குறும்பட உலகத்தில் இருந்து வந்தாலும் தங்கள் பணியை நிறைவாக செய்திருக்கிறார்கள். குறும்படக் கலைஞர்கள் இருப்பதைக் கொண்டு சிறப்பாக செய்வதில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள் .அப்படி இதிலும் செய்திருக்கிறார்கள் .” என்றார்.
லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் ரவீந்திரன் பேசும்போது ,
 ” இந்த விழாவிற்கு என்னை நாயகன் துருவா ,இயக்குநர் ஏ கே , இசையமைப்பாளர் திவாகர் வந்துஅழைத்தார்கள். நானும் குறும்பட உலகத்திலிருந்து  பெரும் படத்துக்கு பல கனவோடுவந்தவன். அப்போது எனக்குப் பழைய நினைவுகள் வந்தன.  நிகழ்ச்சிக்கு இங்கே வந்துள்ள இந்த டி.சிவா சார் அன்று என்னை ஊக்கப்படுத்தியவர். அவர் இங்கிருக்கிறார். எனக்குத் தொழில்நுட்ப ரீதியில் ஆலோசனைகள் வழங்கிய ஜே எஸ்கே சதீஷ் சார் இங்கே இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது .
 இந்தப் படக்குழுவினரைப் பார்க்கும்போது ஒரு நம்பிக்கை வருகிறது. டிரைலரைப் பார்க்கும்போது பாசிட்டிவ் எனர்ஜி வருகிறது. படத்திலும் அதில் இருக்கும் என நம்புகிறேன். படத்தை எனக்குப் பிடித்து இருந்தால் நிச்சயமாக நான் வாங்கி வெளியிடுவேன்.
நான் பெரும்பாலும் புதுவித படக்குழுவுடன் தான் பணியாற்றுகிறேன். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கே உள்ள சினிமா வெளியீடு மற்றும் வியாபார விஷயங்கள் எனக்குத் தெரியாமல் இருந்தது .அது புரிவதற்கு ஏழு வருடங்களானது. நேற்று வெளியான ‘கூர்கா’ படத்தை நான் முதன்முதலில் வெளியிட்டுள்ளேன். பெரிய விலை கொடுத்துவிட்டதாகவும் பலரும் சொன்னார்கள் .கதையை மட்டும் பார்த்தேன் .படமும்  வெற்றிகரமாக ஓடுகிறது.
 ஒரு படத்தை உருவாக்க நினைக்கும் போது கிடைக்கும் தோல்வியில் இருந்து எழுந்து போராடி கிடைக்கும் வெற்றி அளவில் பெரியதாக இருக்கும் ” என்றார்.
 தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா பேசும்போது “
 இது ஒரு நம்பிக்கை தரும் பட முயற்சி என்று சொல்லலாம். குறும்படத்திலிருந்து நிறைய நம்பிக்கையானவர்கள் வருகிறார்கள். தெலுங்கில் எப்படி விஜய் தேவர்கொண்டா ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வந்தாரோ  அதே போல் துருவா அவர்களுக்கும் சூப்பர் டூப்பர் பெரிய வெற்றி படமாக அமையும். பார்ப்பதற்கு அவரைப் போலவே இருக்கிறார். என்று பாராட்டினார். சூப்பர் டூப்பர் ட்ரைலரை பார்க்கும் போது இது ஒரு மாஸ் கமர்சியல் படங்களுக்கு தேவையான அனைத்து அம்சங்களும் இருக்கிறது. நிச்சயமாக வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.ஒன்றை இங்கே சொல்ல வேண்டும். ஊடகங்களில் நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. அதனால் இந்த  விளக்கம் தர வேண்டி உள்ளது. தயாரிப்பாளர்கள் விமர்சனத்திற்கு எதிரானவர்கள் அல்ல என்பதை நான் உறுதியாகக் கூறுகிறேன் .ஒருபோதும் தயாரிப்பாளர்கள்  விமர்சனங்களை எதிர்ப்பதில்லை. தரக்குறைவான விமர்சனங்களைத்தான் எதிர்க்கிறோம்.
 மோசமாக விமர்சனம் செய்த படங்க களும் ஓடிஇருக்கின்றன .விமர்சனங்கள் நாகரிகத்தின் எல்லை தாண்டாமல் இருக்க வேண்டும் .அதற்கு வரம்பு உண்டு. அந்த எல்லை மீறிப் போகக்கூடாது .”என்ன படம் எடுத்திருக்கிறார் ? தியேட்டருக்குப் போகாதீர்கள்” என்று எல்லாம் கேவலமாகப் பேசக் கூடாது.தி.நகரில் ஒரு கடை வாசலில் நின்று கொண்டு  “அந்த கடையில் பொருள் வாங்காதே, எதுவும் எடுக்காதே” என்று கூறினால் அவர் அந்த நேரம் எந்தச் சட்டை போட்டு இருந்தாலும் அதைக் கிழித்து விடுவார்கள். சினிமா அவ்வளவு தூரம் கேட்பாரற்ற தொழில் அல்ல .படத்தின் முடிவு என்ன என்பதை ரசிகர்கள் தீர்மானிக்கட்டும். முதல் நாள் முதல் ஷோவே  வெற்றி பெறுவதில்லை. அவன் பார்க்க அவகாசம் கொடுங்கள்.
 விமர்சனங்களால் ஓடிய படம் நிறைய உண்டு. நல்ல விமர்சனங்களால் ஓடாத படங்களும் உண்டு,விமர்சனம் என்கிற பெயரில் சிலர் செய்யும் இந்த செயல்களால் வருத்தப்படுகிறோம். இது எல்லை மீறிச் சென்றால் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம் என்று  எச்சரிக்கிறோம் . ” இவ்வாறு டி.சிவா பேசினார். முன்னதாக ‘சூப்பர் டூப்பர்’ படத்தின் பாடல்கள்  வெளியிடப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img