spot_img
HomeNewsவாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்திய நடிகையின் பெயரே வாக்காளர் பட்டியலில் இல்லையாம்

வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்திய நடிகையின் பெயரே வாக்காளர் பட்டியலில் இல்லையாம்

பாராளுமன்றத் தேர்தல் ஆறு கட்டங்களாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் பல பேர் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என குற்றம் சாட்டினார்கள். நடிகர் சூரி கூட எனது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என்று சொன்னார. வாக்களிக்க முடியாத வருத்தத்தை வெளிப்படுத்தினார். ஆனால் அவர் மனைவிக்கு மட்டும் வாக்கு இருந்தது ஆச்சரியம்.

அப்படி சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி தமிழிலும் கூட ரிலீஸ் ஆன பிரேமலு என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்தவர் மமிதா பைஜு. இன்று கேரளாவில் தேர்தல் நடைபெற்ற நிலையில் இவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டுள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதில் என்ன காமெடி என்றால் தேர்தல் கமிஷன் வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும், அதிலும் குறிப்பாக இளைஞர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என அவர்களை ஊக்கப்படுத்துவதற்காக தீவிரமாக பிரச்சாரம் செய்தது.

அப்படிப்பட்ட ஒரு பிரச்சாரத்தில் சினிமா நடிகையான இந்த மமிதா பைஜூவையும் பிரச்சார பீரங்கியாக பயன்படுத்தியது. ஆனால் அவருக்கே ஓட்டு இல்லை என்பதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img