spot_img
HomeNewsதன் கடைசி படத்தில் அந்த இரண்டு ஹீரோயின்களை மட்டும் டிக் செய்த விஜய்

தன் கடைசி படத்தில் அந்த இரண்டு ஹீரோயின்களை மட்டும் டிக் செய்த விஜய்

நடிகர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலில் களம் இறங்கப் போவதாக கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது கட்சியை முறைப்படி அறிவித்தார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவ்வளவாக பிரபலமாக மீனாட்சி சவுத்ரி என்கிற நடிகையும் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சினேகாவும் நடித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் விஜய் இன்னும் ஒரு படம் மட்டும் நடிக்க இருக்கிறார். அந்த படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்பதே இன்னும் முடிவாகவில்லை. அதே சமயம் அந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க இருப்பதாகவும் அதை விஜய் முடிவு செய்துவிட்டார் என்றும் ஒரு தகவல் கசிந்துள்ளது.

அதாவது அவருடன் கத்தி, தெறி ஆகிய படங்களில் நடித்த சமந்தாவும் பைரவா, மெர்சல், சர்க்கார் ஆகிய படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷும் இந்த கடைசி படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்களாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img