spot_img
HomeNewsதியேட்டரில் குத்து டான்ஸ் ஆடிய மகள் ; அப்செட்டில் இயக்குனர்

தியேட்டரில் குத்து டான்ஸ் ஆடிய மகள் ; அப்செட்டில் இயக்குனர்

தமிழ் சினிமாவில் ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்பு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படங்கள் அவ்வப்போது தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றன அதில் பெரும்பாலான படங்கள் வழக்கமாக வெளியாகும் படங்களை விட மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகின்றன

குறிப்பாக 20 வருடத்திற்கு முன்பு சிறு வயது குழந்தைகளாக இருந்த இன்றைய இளைஞர்கள் விஜய், அஜித், ரஜினி ஆகியோர் நடித்த பழைய படங்களை தியேட்டரில் புதிது போல உற்சாகத்துடன் பார்க்கின்றனர். அந்த வகையில் சமீபத்தில் விஜய், த்ரிஷா நடித்த கில்லி திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகியது. இந்த படம் திரையிட்ட திரையரங்குகளில் எல்லாம் விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது இன்றைய இளம் ரசிகர்களும் கூட ஒவ்வொரு பாடலுக்கும் ஆடிப்பாடி கொண்டாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஒரு தியேட்டரில் அப்படி போடு என்கிற பாடலுக்கு இயக்குனர் பிரபு சாலமனின் மகள் பயங்கரமாக குத்து டான்ஸ் போட்ட வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியானது. இதை பலரும் பிரபு சாலமனுக்கு அனுப்பி வைத்து இது உன் மகளா பார்.. சூப்பராக என்ஜாய் பண்ணி டான்ஸ் ஆடுகிறாள் என்று கேட்க நொந்து போய்விட்டாராம் பிரபு சாலமன்.

அவர் ஒரு இயக்குனர் என்றாலும் தன் மகள்கள் சினிமாவில் நடிக்கவோ அல்லது சினிமா சார்ந்து வேறு எந்த விஷயத்திலும் ஆர்வம் காட்டவோ கூடாது என கொஞ்சம் கண்டிப்பு காட்டி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img