Monthly Archives: August 2019
லவ் குருவாக மாறிய மொட்ட ராஜேந்திரன்
நானும் சிங்கள் தான் ’’ ரோமேண்டிக் காதல்,காமேடி கலந்த படம். இந்த திரைப்படத்தை இயக்குகிறார், புது முக இயக்குனர் ரா. கோபி. கதா நாயகனாக அட்டகத்தி தினேஷ்,கதா நாயகியாக தீப்த்தி ஷெட்டி நடித்துள்ளனர். இதில் மொட்ட ராஜேந்திரன் முக்கியமான காமடி நடிகராக நடித்துள்ளார். இவர் இதுவரைக்கும் வில்லனாக, காமிடியனாக நடித்துஇருந்தாலும் , இதில் இவர் ஒரு ரோமேண்டிக் காமிடியனாக வருகிறார். லண்டன் வாழ் தமிழனாக FM ஸ்டேஷ்சனில் ஆர்.ஜே வாக தனது கதாபாத்திரத்தில் கலக்கி உள்ளாராம். MR. LOVE என்ற பெயரில் காதலர்களுக்கு டிப்ஸ் கொடுத்து உதவும் லண்டன் லவ் குரு.
காதலை சேர்த்து வைப்பறக்கு , காதல் தோல்வியில் விரைத்தி அடைந்தவர்களுக்கு , முகிகயமாக சிங்கிளாக இருப்பவர்களை மிங்கிளாக மாற்ற ஐடியாக்களை கொடுக்கும்MR.LOVE வாக கலக்கி இருக்கிறாம்.
தினேஷ்வுடன் சேர்ந்து காமெடியில் பட்டைய கிளப்பி , வெளுத்து வாங்கி இருக்கிறார். தமிழ் சினிமாவில் தன் குரலுக்கு என ஒரு கூட்டம் உடையவர் , ஒரு R J வாக பார்ப்பதுபுதிதாக இருக்கும் என படக்குழு கூறுகின்றனர்..
கட்டயாமாக நமது 90’ஸ் சிங்களுடன், 60’ஸ் சிங்களின் ஆட்டம் வெகுவாக நம்மை கவரபோகிறது….
விமல் – ஸ்ரேயா நடிப்பில் ஆர்.மாதேஷ் இயக்கியுள்ள ” சண்டகாரி- The பாஸ்”
பாஸ் புரொடக்ஷன்ஸ் கார்ப்பரேசன் & மெட்ரோ நெட் மல்டிமீடியா பட நிறுவனங்கள் இணைந்து வழங்க J.ஜெயகுமார் மிகப் பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படத்திற்கு " சண்டகாரி - The Boss என்று வித்தியாசமான...
மகாமுனி கதையை எழுதுவதற்கு இயக்குநர் சாந்தகுமார்க்கு எட்டு வருடங்களானது.
ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் இயக்குநர் சாந்தகுமாரின் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா, மஹிமா நம்பியார் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மகாமுனி.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று காலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நாயகன் ஆர்யா, நாயகிகள் மஹிமா நம்பியார், இந்துஜா, தயாரிப்பாளர் KE ஞானவேல்ராஜா, இயக்குநர் சாந்தகுமார், இசையமைப்பாளர் S.தமன், மற்றும்தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசும்போது,
“2010-ல் மெளனகுரு என்ற படம் வெளியானது. நான் அந்தப் படத்தை மூன்றாவது வாரத்தில்தான் பார்த்தேன். அதில் ஒரு விபத்து காட்சி இடம் பெறும். அதைக் கண்டு நான்பெரிதும் வியந்தேன்.
அதன் பின்பு நான் இயக்குநர் சாந்தகுமாரை சந்தித்தேன். இந்த மாதிரி ஒரு படத்தை எடுப்பதற்கான எண்ணம் எப்படி வந்தது என்று கேட்டேன். அவருடன் வேலை செய்யவிருப்ப்ப்பட்டு இருவரும் இணைந்தோம்.
இந்தக் கதையை எழுதுவதற்கு அவருக்கு எட்டு வருடங்களானது. ஆனால், அது மிகவும் அற்புதமாக வெளிவந்திருக்கிறது. நாங்கள் முதலில் வேலை செய்யத் துவங்கியபோதுஅவருடைய மகன் நான்காம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தார். இப்போது பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறார். இந்தப் படத்தின் மொத்தக் குழுவினரும் கடின உழைப்பைவெளிப்படுத்தியுள்ளனர்..” என்றார்.
கவிஞர் முத்துலிங்கம் பேசும்போது,
“நான் இந்தப் படத்தில் இரண்டு பாடல்களை எழுதியுள்ளேன். இயக்குநர் சாந்தகுமாரும், இணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தியும் இந்த வாய்ப்பை எனக்களித்தனர். நான்இதுவரையிலும் 1500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளேன். 44 பாடல்களுக்கு இசையமைத்துள்ளேன். நான் எழுதிய பாடலான ‘காஞ்சிப் பட்டுடுத்தி’ என்ற பாடலைசாவித்திரி என்பவர் பாடியிருந்தார்.
நான் பாடல் எழுத வந்தபோது இசையமைப்பாளர் தமன் ‘எங்கம்மாவும் நல்லா பாடுவாங்க ஸார்.. நல்ல தமிழ்ப் பாட்டு பாடியிருக்காங்க. இந்தப் பாட்டைக்கேட்டிருக்கீங்களா?’ என்று சொல்லி ‘காஞ்சிப் பட்டுடுத்தி’ என்ற பாடலைப் பற்றிச் சொன்னார். அப்போது இணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி ‘அந்தப் பாடலை எழுதியவரேஇவர்தான்’ என்று சொன்னார். இந்தப் படம் மத்திய, மாநில அரசு விருதுகளை வெல்லும் என்று நம்புகிறேன்..” என்றார்.
இசையமைப்பாளர் தமன் பேசும்போது,
“நான் இதுவரையிலும் 11 வருடங்களில் 110 படங்களுக்கு இசையமைத்துள்ளேன். ஆர்யா எனக்களித்த ஊக்கத்தைவிடவும் வேறு யாரும் எனக்கு அளித்ததில்லை. அவருடன்வேலை செய்வதில் எனக்கு மிகவும் விருப்பம். அவருடன் பல படங்களில் பணியாற்றியிருக்கிறேன். அவருக்கு எனது நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இயக்குநர் சாந்தகுமார் தமிழ்ச் சினிமாவில் ஒரு மிகப் பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்தவர். அது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு அதுவும் வெற்றி பெற்றது. வெற்றியின்பின்னால் அனைவரும் ஓடிக் கொண்டிருக்கும்போது, இவர் அதைப் பற்றிக் கண்டு கொள்ளவில்லை. அதைவிட்டு விலகி வந்துவிட்டார். அது எனக்கு மிகவும்கவலையளித்தது.
அச்சமயத்தில் ஞானவேல்ராஜா ஸார் இவருடன் இணைந்து ஒரு படம் செய்ய இருக்கிறார் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். அதிலும் ஆர்யா இதில் நாயகனாகநடிக்கப் போகிறார் என்பதைக் கேட்டு மேலும் சந்தோஷப்பட்டேன்.
ஆர்யா இந்தப் படத்தில் நடிக்கவில்லை. வாழ்ந்திருக்கிறார். இந்துஜா, மகிமா மற்றும் படத்தில் நடித்த அனைத்து நட்சத்திரங்களும் படத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்…” என்றார்.
படத் தொகுப்பாளர் சாபு ஜோஸப் பேசும்போது,
“பத்து வருடங்களுக்கு முன்னால் நான் ஆண்டனியிடம் வேலை செய்து கொண்டிருக்கும்போது ‘சில்லுன்னு ஒரு காதல்’ படத்தின் சுவரொட்டியை கொண்டு வந்தார்கள்.அதைக் கண்டவுடன் இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீனுடன் ஒரு படத்திலாவது வேலை செய்துவிட வேண்டும் என்ற எண்ணம் என்னுள் உதித்தது.அது இந்தப் படத்தின் மூலமாக நிறைவேறியுள்ளது. இங்கே மேடையில் உள்ள அனைவருமே இங்கே இருப்பதற்கு தகுதியானவர்கள். ஒத்துழைப்பு வழங்கிய எனதுஉதவியாளர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்…” என்றார்.
மர்மங்கள் நிறைந்த திரில்லரில் துப்பறியும் விதார்த்.
கூத்துப் பட்டறை கலைஞனாக வாழ்வை ஆரம்பித்த நடிகர் விதார்த் சினிமாவில் தான் தேர்ந்தெடுக்கும் வித்தியாசமான கதைகள் மூலம் தன்னை ஒரு நல்ல நடிகனாக வளர்த்து கொண்டிருக்கிறார். அவர் தேர்ந்தெடுக்கும் களங்கள் கதாப்பாத்திரங்கள் அனைத்தும்...
‘ஒத்த செருப்பு சைஸ் 7’ வரை சிங்கப்பூரில் நடைபெறும் தெற்காசிய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.
அவர் உருவாக்கிய படைப்புகள் ஒருபோதும் ரசிகர் கூட்டத்தினிடையே ஒரு ஈர்ப்பை கொடுக்க தவறியதில்லை. கலை மற்றும் வணிக ரீதியான திரைப்படங்களுக்கு இடையிலான இடைவெளியை குறைப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் இருந்த ஒரு தடையை...
சோஹன் ராயின் சி.எஸ்.ஆர் திரைப்படமான கானல் நீர், செப்டம்பர் 13ம் தேதி வெளியாகிறது.
சென்னை: பிரபல இயக்குனர் எம்.பிரேம்குமாரின் சி.எஸ்.ஆர்
திரைப்படமான கானல் நீர் தமிழகத்தில் செப்டம்பர் 13 ம் தேதி
வெளியாகிறது. ஒரு பரபரப்பான நகரின் மத்தியில் வாழும்,
வீடில்லாத பெண் மற்றும் அவரது குழந்தையின் போராட்டமான
வாழ்க்கையை சித்தரிக்கும் இந்த திரைப்படம் ஏற்கனவே சமூகத்தின்
அனைத்து தரப்பைச்சேர்ந்த முன்னணி மனிதர்களை
கவர்ந்திருக்கிறது.
திரைப்படத்தின் நாயகியாக பிரியங்கா நாயர் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரம் காலை ஹரீஷ் பெரேடி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
டி.எஸ்.சுரேஷ் பாபு திரைக்கதை எழுதியிருக்கிறார். சோகன் ராய்,
தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படம் சி.எஸ்.ஆர் ( நிறுவன சமூக
பொறுப்புணர்வு) பிரிவில் தயாரிக்கப்பட்டுள்ள உலகின் முதல்
நன்கொடை திரைப்படமாகும் . இந்த திரைப்படம் ஆஸ்கர்
விருதுக்கான சிறந்த திரைப்படம் பிரிவில் நாமினேஷனுக்கு
போட்டியிடுகிறது.
இந்த திரைப்படத்தின் மூலம் கிடைகும் லாபம் அனைத்தும்
நிலமில்லாதவகள் மறுவாழ்வுக்கு மற்றும் பெண்கள்
அதிகாரமளிக்கும் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும். இந்த இரண்டு
கருப்பொருள்களும் திரைப்படத்தில் பிரதானமாக
கையாளப்பட்டுள்லது. கேரள மாநிலம் கொச்சியில் பாலம் ஒன்றின் கீழ் வசிக்க நேர்ந்த குடும்பம் பற்றி பிரபல நாளிதழில் வெளியான
செய்திக்கட்டுரையை அடிப்படையாக கொண்டு கானல்நீர் படம் அமைந்துள்ளது. பெரும்பாலான நிலமில்லாதவர்கள், தங்கள் குடும்ப
பெண்களை பாலியல் தாக்குதலில் இருந்து காப்பதற்கான
பாதுகாப்பான இடத்தை தேடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
பெரும்பாலும் அதிகாரவர்கத்தால் அலட்சியம் செய்ப்படும், நில உரிமை போராட்டம் பற்றியும் திரைப்படம் பேசுகிறது. இந்தியா
அதிகாரவர்கத்தின் மந்தமான தன்மை மற்றும் உதவி
தேவைப்படுபவர்களுக்கு உதவாமல் இருக்கும் அதிகாரவர்த்தின்
தன்மை பற்றியும் கானல் நீர் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
முக்கியமாக கானல் நீர், ஒரு குறிக்கோள் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படம் பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பரவலானபாராட்டுகளை
பெற்றுள்ளது. கலை, நேர்த்தி மற்றும் சிறந்த நடிப்பு ஆகிய
அம்சங்களை கொண்டுள்ள படமாக விளங்குகிறது.
உதயா – விதார்த் நடிக்கும் ‘அக்னி நட்சத்திரம்’
கரிஷ்மடிக் கிரியேஷன்ஸ்' மணிகண்டன் சிவதாஸ் - ஜேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிப்பு
1988ல் மணிரத்னம் இயக்கத்தில், கார்த்திக்-பிரபு நடிப்பில் வெளியாகி மிகப் பெரும் வெற்றி பெற்ற ‘அக்னி நட்சத்திரம்’ திரைப்படத்தை யாரும் மறந்திருக்க...
முதல் பார்வையில் முந்திய “ரங்கா” டீஸர்!
முதல் பார்வையில் முந்திய “ரங்கா” டீஸர்!
https://youtu.be/SwgnCWunhik
முதல் அபிப்ராயமே சிறந்த அபிப்ராயம் எனும் பழமொழி எளிமையானதென்றாலும், பல துறைகளுக்கும் பொருந்தும் ஒரு சிறந்த பழமொழியாகும்.
ஒரு சினிமாவை பொறுத்தவரை இந்த பழமொழி இன்னும் மிக முக்கியத்துவம்...
சந்தானம் முதன்முதலாக மூன்று வேடத்தில் நடிக்க இருக்கும் புதியபடம் !!
தொடர் வெற்றிகளை கொடுத்து வரும் சந்தானம் நடிப்பில் உருவாக இருக்கும் ஒரு படத்தின் அறிவிப்பு பெரிய சர்ப்ரைஸை தருகிறது. முதன்முதலாக சந்தானம் மூன்று வேடமேற்று ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். சயின்ஸ் பிக்ஷன்...