spot_img
HomeNewsஃபிங்கர்டிப்’  திரில்லர் இணையத் தொடர் ஆகஸ்ட் 21ல் ZEE5ல் வெளியீடு*

ஃபிங்கர்டிப்’  திரில்லர் இணையத் தொடர் ஆகஸ்ட் 21ல் ZEE5ல் வெளியீடு*

 ‘ஃபிங்கர்டிப்’ 

திரில்லர் இணையத் தொடர் ஆகஸ்ட் 21ல் ZEE5ல் வெளியீடு*

 

சமூக வலைதளத்தின் தவறான விளைவுகளை மையப்படுத்தி ஐந்து புதிரான கதைகளைக் கொண்ட இந்த தொடர், வருகின்ற ஆகஸ்ட் 21ம் தேதி இணையத்தில் வெளியிடப்படுகிறது

 

 

இந்தியாவின் வெகு வேகமாக வளர்ந்து வரும் ஓடிடி (OTT) தளமான ZEE5ல், ஏற்கனவே வெளியாகி வெற்றியடைந்த தமிழ் தொடர்களான திரவம், ஆட்டோ சங்கர் ஆகியவற்றை தொடர்ந்து, மேலும் ரசிகர்களை ஈர்க்கும் வண்ணம்ஃபிங்கர்டிப்எனும் திரில்லர் தொடர் வருகின்ற 21ம் தேதி வெளியாக இருக்கிறது. விஷ்ணு வர்தன் தயாரிப்பில், சிவாகர் இயக்கத்தில், 5 எபிசொடுகளைக் கொண்ட இந்த சமூக ஊடக திரில்லர் தொடரில், அக்ஷரா ஹாசன், அஷ்வின் காகுமனு, காயத்ரி, சுனைனா, மதுசூதன் ராவ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இத்தொடர் பிரத்யேகமாக ZEE5 தளத்தில் வெளியாகிறது.

 

ஃபிங்கர்டிப்எனும் இத்தொடர், ஒரு ஸ்வைப் அல்லது ஒரு சமூக வலைதள பதிவு எப்படி ஒரு பயனாளரின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிடக் கூடும் என்பதையும், அவர்களது சௌகரியங்களைவிட்டு நகர்த்தி, ஒரு தாளமுடியாத சமூக அழுத்தத்தை அவர்கள் மேல் திணித்து விடுகிறது என்பதையும், மிகவும் தெளிவாக எடுத்து காட்டுகிறது. ஒவ்வொரு எபிசோடும், நடைமுறையில் நமது பழக்கத்தில் உள்ள ஒரு ஆப்புடன் ஒப்பிடக்கூடிய வகையில், கற்பனையான அம்சங்கள் நிறைந்த ஒரு ஆப்பை உருவாக்கி, மனிதனுடைய இருட்டான, எதிர்மறை உணர்வுகளான பேராசை, தீராத கோபம் ஆகியவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது

 

அக்ஷரா ஹாசன் பேசும் போது, ‘பல தரமான அசலான தமிழ் படைப்புகளை உருவாக்கி வரும் ZEE5 உடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். சமூக வலைத்தளங்கள் நமது அன்றாட வாழ்வின் இன்றியமையாத பகுதியாக மாறிவிட்ட நிலையில், அதன் தவறான விளைவுகளை பற்றிய ஒரு விழிப்புணர்வை எற்படுத்துவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. நடிக்கும் பொழுது நான் அடைந்த மகிழ்ச்சியை, இத்தொடரை பார்க்கும் ரசிகர்களும் அடைவார்கள் என நம்புகிறேன்.’   

 

இத்தொடரின் இயக்குனர் சிவாகர், ‘அசலான, புதிய நிகழ்ச்சிகளுக்கு ஒரு மிகப்பெ*விஷ்ணு வர்தன்  தயாரிப்பில், அக்ஷரா ஹாசன் நடிப்பில், சமூக ஊடகரிய வரவேற்பு இருக்கும் இந்த காலச்சூழலில், அதன் முன்னோடியாக திகழும் ZEE5 உடன் இணைந்து பணியாற்றுவது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. பரபரப்பான திரில்லர் தொடரானஃபிங்கர்டிப்’, உங்களை வெகுவாக ஈர்க்கும், யோசிக்க வைக்கும், அதே சமயம் உங்களை மகிழ்ச்சியடையவும் செய்யும்”  

 

அபர்ணா அசரேகர், தலைவர், நிகழ்ச்சிநிரல் ZEE5, ‘சமூக வலைதளத்துடன் அன்றாடம் தொடர்பில் இருக்கும் நாம் அனைவருமே அதனுடைய எண்ணிலடங்கா நன்மைகளை அனுபவித்து வருகிறோம். ஆயினும் அதன் ஊடுருவும் தன்மையும், ஆளுமையும் சில எதிர்மறை பயன்களையும் கொண்டிருக்கிறது. அத்தகைய ஒரு கதையானஃபிங்கர்டிப்மிகவும் விறுவிறுப்பாக, ரசிகர்களை ஈர்க்கும் வண்ணம் படைக்கப்பட்டிருக்கிறது. எங்கள் முந்தைய அசல் தமிழ் நிகழ்ச்சிகள் தனித்துவமான வரவேற்பினை பெற்றிருக்கும் நிலையில் இந்தத் தொடருடன் எங்கள் பிராந்திய மொழி நிகழ்ச்சிப் பங்களிப்புகளை மேலும் வலுப்படுத்துவோம் என்று நம்புகிறோம்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img