Home News இறுதிச் சுற்றுக்குள் நுழையப்போவது யார் – விறுவிறுப்பான அரையிறுதி சுற்றில் ‘நாளைய இயக்குனர் 6’

இறுதிச் சுற்றுக்குள் நுழையப்போவது யார் – விறுவிறுப்பான அரையிறுதி சுற்றில் ‘நாளைய இயக்குனர் 6’

0
1752

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நாளைய இயக்குனர் 6-வது சீசன், தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கிறது. பல்வேறு புதிய படைப்புகளுடன் சமூகத்துக்கு தேவையான கருத்துகளை முன்வைக்கும் பல குறும்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், தற்போது அரையிறுதி சுற்று தயாராகி வருகிறது.

சிறு கதை சுற்று, திகில் சுற்று, குழந்தைகள் சுற்று என பல்வேறு சுற்றுகளில் படைப்பாளிகள் தங்களது திறமைகளை வெளிக்காட்டிய நிலையில், காதலை மையப்படுத்திய அரையிறுதி சுற்று தற்போது தயாராகி வருகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த குறும்படங்களின் இயக்குனர்கள் இறுதிச்சுற்றுக்கு  தகுதி பெறுவார்கள். இந்த அரையிறுதி சுற்றில், சிறப்பு விருந்தினர்களாக ஜாக்பாட் பட இயக்குனர் கல்யாண்நடிகர் கதிர்இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

குறும்படங்களின் மூலம் தங்களது திறமைகளை காட்டி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார்? என்பதை அறிய ஞாயிறுதோறும் இரவு 8:00 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘நாளைய இயக்குனர்’ நிகழ்ச்சியை காணத்தவறாதீர்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here