இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள மிக எளிய முறையில் படத்திற்கு பூஜை போடப்பட்டது. மிக விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இப்படத்திற்கு ஶ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்ய, திரு ஒளிப்பதிவு செய்கிறார். சுரேஷ் செல்வராஜன் தயாரிப்பு ஒருங்கிணைப்பு செய்கிறார். மேலும் ஒரு ஆச்சர்யமாக திருவும், சுரேஷும் இவ்வாண்டில் பெரு வெற்றி பெற்ற சூப்பர்ஸ்டார் ரஜினியின் “பேட்ட” படத்தில் பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போதைக்கு சிரு152 (chiru152) என்றழைக்கப்படும் இப்படத்தினை Konidela Production Company உடன் Matinee Entertainments இணைந்து தயாரிக்கிறார்கள். தனித்த ஃபார்முலாவில் தொடர் மெகா வெற்றிப்படங்களாக தந்து வரும் இயக்குநர் கொரட்டாலா சிவா இப்படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் முதல்முறையாக இணைகிறார். இந்தக் கூட்டணி அறிவிக்கப்பட்டதிலிருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் கிளப்பியுள்ளது. இந்தக்கூட்டணி இப்போது படப்பிடிப்பிற்கு தயாரானதை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.