spot_img
HomeCinema Reviewபிகில் - சினிமா விமர்சனம்

பிகில் – சினிமா விமர்சனம்

ஒரு கால்பந்தாட்ட வீரனாக இருந்து, சூழல் காரணமாக அதிலிருந்து விலகிய ஒருவன், ஒரு கால்பந்தாட்ட அணிக்கு கோச்சாக மாறி அந்த அணியை வெற்றிபெற வைப்பது என்ற கதை

 

ராயபுரத்தை தனது பிடியில் வைத்திருக்கிறார் ராயப்பன்(அப்பா விஜய்).அப்பகுதி மக்களுக்கு இடையூறாக பல்வேறு வேலைகளை செய்யும் டேனியல் பாலாஜியின் தந்தையை ராயப்பன் தட்டிக்கேட்கிறார். இதனால் இருவருக்கும் பகை உண்டாகிறது.

ராயப்பனை கொல்ல சதித்திட்டம் தீட்டி வருகிறார் டேனியல் பாலாஜியின் தந்தை. .தன்னைபோல் தனது மகனும் ரவுடி ஆகிவிடக்கூடாது என என்னும் ராயப்பன், பிகிலை[[ மகன்விஜய்] கால்பந்தாட்ட வீரனாக மாற்ற வேண்டும் என தீர்க்கமாக உள்ளார்.

பிகில்  கால்பந்து விளையாட  டெல்லி புறப்படும் வேளையில், ராயப்பனை டேனியல் பாலாஜியின் தந்தை கொன்றுவிடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த பிகில், டேனியல் பாலாஜியின் தந்தையை கொன்றுவிடுகிறார். தந்தை இறந்ததால், ராயபுரம் மக்களை பாதுகாக்க வேண்டும் என பிகில் முடிவெடுக்கிறார்

.  . பின்னர் மைக்கேலாக வாழ்ந்து வருகிறார். விஜய்யின் வாழ்க்கை வேறு மாதிரியாக மாறியதால் அவரால் கால்பந்தாட்டத்தில் ஈடுபட முடியாமல் போகிறது.

இந்நிலையில் விஜய்யின் நண்பரான கதிர் பெண்கள் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளாராக உள்ளார். அவரை வில்லன் டேனியல் பாலாஜி கத்தியால் குத்த மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அதனால், அவர் கோச்சாக இருந்து வழிநடத்த வேண்டிய ஒரு கால்பந்தாட்ட அணிக்கு மைக்கல் கோச்சாகிறார்.பல்வேறு பிரச்சனைகளுக்கு நடுவே விஜய் எப்படி அந்த பெண்கள் அணியை ஒரு வழிக்கு கொண்டு வந்து வெற்றி பெறச் செய்கிறார் என்பதை காட்டியுள்ளார்

விஜய், ராயப்பன் மற்றும் மைக்கேல் என இரு கதாபாத்திரங்களுக்கு ஏற்றாற்போல் உடல் மொழி, நடை என வித்தியாசம் காட்டி அசத்தியிருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் மாஸ் காட்டியிருக்கும் விஜய், செண்டிமென்ட் காட்சிகளில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி தடம் பதிக்கிறார்

தந்தைக்கும் மகனுக்கும் குரலிலும் மீசையிலும் மட்டும் சின்ன வித்தியாசம்.

நயன்தாரா கதாநாயகி என்பதால் இரண்டு பாடல் காட்சிகளில் வருகிறார்.

 

ஆனால் நயன்தாரா விஜய் காதல் காட்சிகள் எல்கேஜி பசங்களை விட கேவலமாக இருக்கிறது அட்லி காதல் படங்களை பார்த்து காட்சிகள் அமைத்திருக்கலாம்

அதுவும் நயன்தாராவின் கல்யாண காட்சிகள் கொடுமைடா சாமி படத்தில் யோகிபாபு விவேக் ஆனந்தராஜ் டேனியல் பாலாஜி என்று நட்சத்திர பட்டாளங்கள் இருந்தாலும் எதுவும் சொல்லும்படி இல்லைஏ ஆர் ரகுமானின் வெறித்தனம் பாடல் மாரி படத்தின் பிஜிஎம் மை  ஞாபகப்படுத்துகிறது

ஒரு கால்பந்தாட்ட மெகாசீரியல் பார்த்ததுபோல் இருக்கிறது பிகில்
180 கோடி செலவு செய்த தயாரிப்பு நிறுவனம் நல்ல கதையை தேர்வு செய்து இருக்கலாம்
இயக்குனர் அட்லிக்கு பிரம்மாண்டம் மட்டுமே படத்தின் வெற்றியை நிர்ணயம் செய்துவிடாது பிரம்மாண்டத்திற்கு சிரத்தை எடுத்தது போல் கதையில் கொஞ்சம் சிரத்தை எடுத்திருந்தால் பிகில் லின் சத்தம்உலகமெங்கும் ஒலித்திருக்கும
பிகில் =காற்று
நடிகர்கள் :

தளபதி விஜய் , நயன்தாரா ,விவேக் , கதிர் ,ஜாக்கி ஷெரஃப், டேனியல் பாலாஜி , ஆனந்த் ராஜ் , தேவதர்ஷினி , யோகிபாபு ,மனோபாலா ,சௌந்தர்ராஜா , LM விஜயன் ,  இந்துஜா , அமிர்தா ஐயர் , ரெப்பா மோனிகா ஜான் , வர்ஷா பொல்லாமா மற்றும் பலர் நடித்துள்ளனர் .

தொழில்நுட்ப கலைஞர் விவரம்:
கதை, திரைக்கதை வசனம் இயக்கம் – அட்லி
தயாரிப்பு – கல்பாத்தி S. அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் (ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட்)
கிரியேட்டிவி தயாரிப்பாளர் – அர்ச்சனா கல்பாத்தி .
இசை – ஏ.ஆர்.ரஹ்மான்
ஒளிப்பதிவு – G.K.விஷ்ணு
படத்தொகுப்பு – ரூபண் L.ஆண்டனி
கலை – T.முத்துராஜ்
சண்டைப்பயிற்சி – அனல் அரசு
பாடல்கள் – விவேக்
நிர்வாக தயாரிப்பு – S.M.வெங்கட் மாணிக்கம்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img