spot_img
HomeNewsநடிகை ராதிகா சரத்குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்திருக்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்!

நடிகை ராதிகா சரத்குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்திருக்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்!

                                                                                                          பாலிவுட்டின் முடிசூடா மன்னனாகத் திகழும் அமிதாப் பச்சன், தென்னிந்திய மக்களின் அபிமானத்தைப் பெற்று திரைப்படங்களிலும், சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் முத்திரை பதித்திருக்கும் நடிகையான ராதிகா சரத்குமாருக்கு தனது பாராட்டுதலையும், வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறார்.

2019, டிசம்பர் மாதத்திலிருந்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்   ஒளிபரப்பாகவிருக்கும் “கோடீஸ்வரி” என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதன் மூலம், சின்னத்திரையில் ஒரு பெரும்புயலை உருவாக்கியிருப்பதற்காகவே , அமிதாப் இந்த பாராட்டுதல்களை ராதிகா சரத்குமாருடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட முழுமுதற் நிகழ்ச்சி என்ற பெருமையினை கோடீஸ்வரி பெறுகிறது. தங்களது அறிவையும், விவேகத்தையும் வெளிப்படுத்துவதற்கு பெண்களுக்கு ஒரு செயல்தள மேடையை வழங்குவதற்காக, ராதிகா சரத்குமாருக்கு பாலிவுட் சூப்பர்ஸ்டார் தன் வாழ்த்துக்களை அனுப்பியிருக்கிறார்.

இந்தப் போட்டியில் கலந்துகொண்டு ரூ.1 கோடி என்ற ஜாக்பாட் பரிசை வெல்வதற்கான, வாழ்நாளில் ஒருமுறையே கிடைக்கக்கூடிய அற்புதமான வாய்ப்பை, இதில் பங்கேற்கும் பெண்கள் பெறுகின்றனர்!

அமிதாப் பச்சன் தனது வாழ்த்துச் செய்தியில், “ராதிகா ஜி, கோடீஸ்வரி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இப்பயணத்தை நீங்கள் தொடங்குகின்றபோது, தேசியஅளவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் வரலாற்றில் முதன்முறையாக கேபிசி நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக பங்கேற்கும் அனைவரும் பெண்களாக இருக்கப்போவதால், உங்களை நான் கண்டிப்பாக வாழ்த்தி பாராட்ட வேண்டும். இதுவொரு தனித்துவமான நிகழ்வாக இருப்பதோடல்லாமல், பெண்களை மிகவும் ஊக்குவிப்பதாக, உத்வேகமளிப்பதாக மற்றும் நம்பிக்கையூட்டுவதாக இருக்கிறது. உங்களுக்கும், இப்போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ராதிகா சரத்குமாரையும் மற்றும் இதில் பங்கேற்கும் பெண் போட்டியாளர்களையும் தனக்கே உரிய தனித்துவமான ஸ்டைலில், பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் வாழ்த்துவதை காண்பதற்கு இந்த அமைவிடத்தை பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img