spot_img
HomeNewsஜெய் நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் 'எண்ணித் துணிக'!

ஜெய் நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘எண்ணித் துணிக’!

ஜெய் நடிப்பில் அடுத்து வெளியாகும் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு வகையான படங்களாக அமைந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கின்றன. தற்போது அவர் நடித்து வரும் புதிய படமான ‘எண்ணித் துணிக’ அதிக கொந்தளிப்பு மிக்க திரில்லர்  வகைப் படமாக தயாராக இருக்கிறது. ரெயின் அண்ட் ஏரோ என்டர்டெயிண் மெண்ட் நிறுவனத்துக்காக சுரேஷ் சுப்ரமணியம் தயாரிக்கும் இப்படத்தின் மூலம் எஸ்.கே.வெற்றி செல்வன் என்ற புதியவர் இயக்குநராக அறிமுகமாகிறார். இயக்குநர் வசந்திடமும் ஒளிப்திவாளர் ரவி கே.சந்திரனிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றி அனுபவம் பெற்றவர் இவர், ஏராளமான விளம்பரப் படங்களையும் எடுத்தவர். இன்று காலை (11-12-2019) ‘எண்ணித் துணிக’ படத்தின் படப்பிடிப்பு சம்பிரதாய பூஜையுடன் நடந்தது. இதில் படத்தில் நடிக்கும் நடிக நடிகையருடன் படத்தில் பணியாற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களும் கலந்து கொண்டனர்.

படம் குறி்த் து இயக்குநர் வெற்றி செல்வன் பகிர்ந்து கொணடதாவது….
“‘எண்ணித் துணிக’ என்ற இப்படத்தின் தலைப்பு திருக்குறளிலிருந்து எடுக்கப்பட்டதாகும். “எண்ணித் துணிக கர்மம்… ” என்று துவங்கும் அற்புதமான குறள் இது,  ஒரு செயலில் ஈடுபடத் தொடங்கும் முன் அது குறித்து எத்தனை முறை வேண்டுமானல் சிந்திக்கலாம். ஆனால் முடிவெடுத்து விட்டால் எக்காரணத்தை முன்னிட்டும் அதிலிருந்து பின் வாங்கக்கூடாது என்பதை அழுத்தமாகச் சொல்கிறது இந்தக் குறள். இதை மையப்படுத்திதான் இப்படத்தின் கதாநாயகன் கதிர் பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஜெய் இந்த வேடத்தில் நடிக்கிறார். தகவல் தொழில் நுட்பக் கம்பெனி ஒன்றில் பணியாற்றும் ஜெய், அந்தக் கணத்துக்காக வாழ்கிறவர். அதற்காக அவர் ஜாலி மனோபாவம் கொண்டவர் என்று சொல்வதற்கில்லை. தன் குடும்பம் மற்றும் நண்பர்கள் குறித்து அக்கறை செலுத்தும் நல்லியல்பு கொண்ட நர்மதா என்ற வேடம்தான் அதல்யா ரவி ஏற்றிருக்கும் வேடம்,  சுண்ணாம்பு மற்றும் வெண்ணெய் போல் முரண்படும் இந்த இருவரும் ஒருவரையொருவர் காதலிக்கின்றனர். ஆனால் படத்தில் முக்கிய திருப்பம் ஏற்படுவது இந்த முரண்பாட்டை வைத்து அல்ல. அமைதியாகச் சென்று கொண்டிருக்கும் ஜெய்யின் வாழ்க்கையில் குழப்பத்தை ஏற்படுத்தும் சில ஆட்களால். இதற்கு பதிலடி தரும் விதத்திலான நடவடிக்கைகளில் ஜெய் ஈடுபடத் தொடங்குகிறார். மொத்தத்தில் ‘எண்ணி்த் துணிக’ ரேஸ் வேகத்தில் செல்லும்  திரில்லர் வகைப் படமாகும்” என்றார் இயக்குநர் வெற்றி செல்வன்.

படத்தில் நடிக்கும் நடிக நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைர்களைப் பற்றி பேசும்போது இயக்குநர் வெற்றி, “சிறப்பான நடிப்பைத் தருவதில் மட்டுமல்ல, நன்கு நடனமாடவும் தெரிந்தவர் ஜெய் என்புது அனைவருக்கும் தெரியும். எண்ணித் துணிக படத்தில் அதிரடியான சண்டைக் காட்சிகளிலும் துணிந்து நடித்து தன் முழுத் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். அதுல்யா ரவி நுட்பமான நடிப்பையும் திறம்பட வெளிப்படுத்தி நடிக்கக் கூடயவர். ஏற்கெனவே கேப்மாரி படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தாலும் எண்ணித் துணிக படம் முழுக்க முழுக்க அதிலிருந்து இருவருக்கும் வேறுபட்டது. ‘சீதக்காதி’ படத்தில் அறிமுகமான நடிகர் வைபவின் அண்ணன் சுனில் ரெட்டி எதிர்மறை வேடத்தில் ‘எண்ணித் துணிக’ படத்தில் நடிக்கிறார். மற்றொரு எதிர்மறையான வேடத்தில் நடிக்க பிரபல நடிகர் ஒருவருடன் பேச்சு வார்த்தை நடப்பதால் விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும்” என்றார்.

அஞ்சலி நாயர் மற்றொரு பிரதான வேடத்தில் நடிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ்.இசையமைக்க. ஜே.பி.தினேஷ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். வி.ஜே.சபு ஜோஸப் படத்தொகுப்பையும், ஜி.என்.முருகன் சண்டைக் காட்சிகளையும் கவனிக்கின்றனர். என்.ஜே.சத்யா ஆடை வடிவமைப்பை கவனிக்கிறார், 96 படப்புகழ் கார்த்திக் நேத்தாபாடல்களை எழுத, விளம்பர டிசைனர் பொறுப்பை ராஜா ஏற்றிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img