spot_img
HomeNewsஈழப் போரின் வலிகளைச் சொன்ன பரதநாட்டிய நிகழ்ச்சி

ஈழப் போரின் வலிகளைச் சொன்ன பரதநாட்டிய நிகழ்ச்சி

ஈழப் போரின் வலிகளைச் சொன்ன பரதநாட்டிய நிகழ்ச்சி!
சுமேதா: ஒரு வித்தியாசமான நாட்டிய விழா!
மதுரை ஆர் முரளிதரன் அமைத்து வழங்கிய  ‘சுமேதா’  (Extremely wise  and Intelligent ) என்கிற பரதநாட்டிய அரங்கேற்ற விழா நிகழ்ச்சி சென்னை சின்மயா ஹெரிடேஜ் சென்டரில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பத்மபூஷன்
திரு டி .எச். விக்கு விநாயக் ராம் தலைமையேற்றார். சிறப்பு விருந்தினர்களாக பத்மஸ்ரீ பேராசிரியை திருமதி சுதாராணி ரகுபதி , கலைமாமணி திருமதி அனிதா ரத்னம் , பத்மஸ்ரீ
 திரு ஹரித்துவாரமங்கலம் ஏ.கே. பழனிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர் .
பொதுவாக கலையை கேளிக்கையாகவும் கொண்டாட்டமாகவும் பார்க்கிறார்கள். கலை என்பது மக்களுக்கானது. என்பதை உணராமல் கலை என்பது வெறும் பொழுதுபோக்கு என்பவர் பலர். அவர்கள் நடுவே கலை என்பது மக்களின் போராட்டத்தை வெளிப்படுத்தும் வடிவம் என்பவர் சிலர்.
இப்படிப்பட்ட  சூழலில் ஒரு பரதநாட்டிய நிகழ்ச்சியிலும்  இலங்கைப் போரின் வலிகளை வெளிப்படுத்த முடியும் என்பதற்கு உதாரணமாக இருந்தது ‘ சுமேதா’ நாட்டிய நிகழ்ச்சி.
இந்நிகழ்ச்சியில் இலங்கைத் தமிழரான பரராஜசிங்கம் அவர்களின் மகள் ஸ்வேதா பரராஜசிங்கம் ஆடிய நடனம் காண்பவரைக் கலங்க வைக்கும்படி  அமைந்திருந்தது. நிகழ்ச்சியில்   அவர் திஸ்ர ஜதி அடா தாளம் அமைப்பில் நடனம் ஆடி அசத்தினார்..
 கனடாநாட்டிலிருந்து டொரொண்டோ நகரிலிருந்து இங்கு வந்து பரதநாட்டியப்பயிற்சி பெற்று இந்த நிகழ்ச்சியில் ஆடினாலும், தன் ஈழ மண்ணின் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் ஒரு நடனம் ஆடினார் .
 ‘போய் வா மகனே’ என்று தொடங்கும் அந்தப் பாடலுக்கு   ஸ்வேதா பரராஜசிங்கம் நடனம் ஆடிய விதமும் பாவம் காட்டிய பாங்கும் பார்ப்பவரைக் கலங்க வைத்தது. இதை நடன ஆசிரியர் மதுரை ஆர். முரளிதரன் அழகாக அமைத்திருந்தார்.
நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு இயக்குநர், நடிகர் தியாகராஜன் பேசும்போது
’’ஸ்வேதா நடனத்தைப் பார்த்து கண் கலங்கி விட்டேன். அற்புதமான நடனம் .இன்னும் மென்மேலும் பல சாதனைகளைப் படைக்க வேண்டும் என் மனதார வாழ்த்துகிறேன்” என்று வாழ்த்தினார்..
நிகழ்ச்சியில் ஸ்வேதா பேசும்போது,
 என் தாய் தான் முதல் குரு என் சிறு வயதிலே  நடனத்தைக் கற்றுக் கொடுத்தார் அதன் பிறகு ஆசிரியர் முரளிதரன் அவர்களிடம் நான் பத்து ஆண்டுகளாக நடனம் கற்று வருகிறேன் . பரத நாட்டியத்தில் மேலும் பல சாதனைகள் படைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நான் இப்போது கல்லூரியில் BSC science படித்தாலும் நடனம் ஆடுவதைத் தொடர்ந்து  வருகிறேன். கனடாவில் பல இடங்களில் 100 மேடைகளில் நான் நடனமாடி இருக்கிறேன் .தமிழ் மண்ணின் பாரம்பரிய கலையான பரதக் கலையை நான் ஆடும் போது எனக்குள் பெருமையும் பெருமிதமும் உணர்கிறேன். வெளிநாட்டில் இருந்து தமிழ் மண்ணில் தமிழ் மக்கள் மத்தியில் இன்று ஆடியது உணர்ச்சிகரமான தருணமாக இருக்கிறது.” என்றார்.
ஸ்வேதாவின் தந்தை  பரராஜசிங்கம் 2019-ல் தமிழில் ’நேத்ரா’ என்ற படத்தைத் தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சிக்கு பத்மபூஷன் திரு டி .எச். விக்கு விநாயக் ராம் தலைமையேற்றார். சிறப்பு விருந்தினர்களாக பத்மஸ்ரீ பேராசிரியை திருமதி சுதாராணி ரகுபதி , கலைமாமணி திருமதி அனிதா ரத்னம் , பத்மஸ்ரீ
 திரு ஹரித்துவாரமங்கலம் ஏ.கே. பழனிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர் .
இந்த நிகழ்ச்சியில்  இயக்குநர் ஏ. வெங்கடேசன், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, பத்திரிகையாளர்  மக்கள்குரல் ராம்ஜி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img