spot_img
HomeNews308 பானைகளுடன் ஐம்பூதம் இடத்தில பெண்கள் சமத்துவ பொங்கல் :

308 பானைகளுடன் ஐம்பூதம் இடத்தில பெண்கள் சமத்துவ பொங்கல் :

கலப்பை மக்கள் இயக்கம்   308 பெண்கள்  பானைகளில் T. ராஜேந்தர் தலைமையில் சமத்துவ பொங்கல்:இந்தியாவிலே 308 பானைகளுடன் ஐம்பூதம் இடத்தில பெண்கள் சமத்துவ பொங்கல் :
கலப்பை மக்கள் இயக்கத்தின் சார்பில் ஆண்டு தோறும் தென் கோடி முனை குமரி மாவட்டம்
ரஸ்தாகாடு கடற்பரப்பில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டு  வருகிறது …இந்த நிகழ்வை
கலப்பை மக்கள் இயக்கத்தின் நிறுவன தலைவரும் ,இயக்குனருமான PT செல்வகுமார்
தலைமை ஏற்று நடத்தினார் ….விழாவின் சிறப்பு அழைப்பாளராக லட்சிய திராவிட முன்னேற்ற
கழகத்தின் நிறுவன தலைவரும் இயக்குனருமான T.ராஜேந்தர் மற்றும் குமரி பாராளுமன்ற
உறுப்பினருமானH  .வசந்த குமார் ,பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் கலந்து
கொண்டார்கள் ..விழாவில் பங்கேற்று T .ராஜேந்தர் அவர்கள்  பேசியதாவது! பிரிவினைவாதம் ஒழியட்டும் !உலகத் தமிழர்களுக்கு இந்த சமத்துவ பொங்கல் சமர்ப்பணம்!:குமரி மண்ணிலே
நம் கலாச்சாரத்தை தாங்கி பிடிக்கும்  வகையிலே நம் பாரம்பரிய விளையாட்டுக்களான சிலம்பாட்டம்
கரகாட்டம் ,ஒயிலாட்டம் ,பொய்க்கால் குதிரை,கிராமிய கலைகள்  நடந்தன ..இது தமிழனின் பண்பாட்டை
மீண்டும் உலகறிய செய்து கொண்டிருக்கும் குமரி மக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி ..இந்த அருமை
விழாவில் ஐம்பூதங்களையும் கொண்ட காற்று ,நிலம் ,நீர், ஆகாயம், நெருப்பு கொண்ட இந்த ரஸ்தாகாடு
கடற்பரப்பில் இறை பகவானுக்கு நன்றி சொல்லும் விதமாக பெண்கள் அனைவரும் ஒரே சீருடைஅணிந்து 308 பானைகளில் பொங்கல் வைத்தது பானையில் பொங்கல் பொங்கியதன் முலம்
குமரியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் மதத்திற்கு அப்பாற்பட்ட சமத்துவ பொங்கல் என்பதை
அழகாக காட்டியது இந்த சமத்துவ பொங்கல் மட்டுமல்ல தமிழகத்தில் எங்கு மக்கள் பாதிக்கப்பட்டாலும் சரி கலப்பை மக்கள் இயக்கம்  சுயநலம் இல்லாமல் மக்களுக்கு உதவுகிறது அதற்கு எடுத்துக்காட்டாக என் மூலமாகவே 27 லட்சம் லட்சம் ரூபாய்க்கு கஜா புயல் நிவாரண பணிகளை  என் கையால் மூன்று லாரிகளில் கலப்பை மக்கள் இயக்கம் அனுப்பியதோடு  கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை வைத்து1008 ஆட்டுக்குட்டிகள் நடிகர் G. V. ப்ரகாஷ் அவர்களை வைத்து 108பசுகன்றுகள்   வழங்கி சாதனை படைத்தது.. ஓகி புயலின் போதும்  குமரி மாவட்டத்தில் 50,000  மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்தார்கள்…. உண்மையிலேயே இந்த கூட்டத்தில் வந்திருக்கும் தாய்மார்களை கண்டு வியக்கிறேன் ஒரு கட்சியை  நடத்துபவன் என்ற முறையில் எனக்கு தெரியும்  தாய்மார்களின் கூட்டத்தைக் கூட்டுவது எவ்வளவு கஷ்டம் என்று ஆனால் இங்கு இயல்பாகவே அனைவரும்   ஒரே சீருடை அணிந்து  இவ்வளவு நேரம் இங்கு நின்று  தமிழனின் பண்பாட்டை உலகறியச் செய்து கொண்டிருக்கிறார்கள்    என் வாழ்நாளில் இப்படி ஒரு விழாவில் கலந்து கொண்டதை பெரும் பாக்கியமாக நினைக்கிறேன்… தமிழகத்திலே ஆயிரத்தெட்டு கட்சிகள் நம் ஜாதியால் மதத்தால் நம்மைப் பிரித்து வைத்துள்ளார்கள் ஆனால் கலப்பை மக்கள் இயக்க மூலம் எந்த சுயநலமும் இல்லாமல் எந்த அரசியலும் இல்லாமல் நம்மை  சமத்துவ பொங்கல் மூலம் உலகத் தமிழர்களுக்கு நாம் அனைவரும்  ஒற்றுமையை சமர்ப்பிக்கும் விதமாக இந்த பொங்கல் சிறப்பாக நடந்து விட்டது.. இனிமேல் பிரிவிலேயே நமக்குள் உருவாக்க நினைப்பவர்களுக்கு இந்த சமத்துவ பொங்கல் வெற்றி  ஒரு சவுக்கடி தான்! ஜாதி மதங்களை கடந்து இந்த இரவு வரை இந்த காட்டுப் பகுதி  ரஸ்தாகாடு  கடற்கரையில் ஆயிரக்கணக்கான பெண்கள் திரண்டது இந்த கலப்பை மக்கள் இயக்கத்தின் சமூக சேவைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கிறேன் ! இதுபோன்ற சமத்துவ விழாக்கள் மூலம் தான்  நம் மனிதர்களுக்குள் இருக்கும் வேற்றுமை மறந்து  ஒற்றுமையும் வளத்தையும் உருவாக்க முடியும்!கலப்பை மக்கள் இயக்கம்  தொடர்ந்து தமிழனின்   உரிமைக் குரலாக விளங்கும் என்பதில் எள்ளளவும் மாற்றம் இல்லை..  என்று கூறினார்… இதையடுத்து பேசிய குமரி பாராளுமன்ற உறுப்பினர் வசந்த குமார் அவர்கள்.. ஒரு தனிமனிதனாக நின்று  இவ்வளவு பெரிய கூட்டத்தை இங்கு திரட்டிய பிடி செல்வகுமார் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த  பாராட்டுகளைத்  தெரிவித்துக் கொள்கிறேன்… கலப்பை மக்கள் இயக்கம்  இந்த கடற்பரப்பில் இப்படி ஒரு சமத்துவ பொங்கல் எடுத்து 308 பானையுடன் பெண்கள் அனைவரும் ஒரே  சீருடையில் வரவைத்து  விழாவைஎடுப்பது சாதாரண விஷயமல்ல….. மண்ணுக்கும் மனிதனுக்குமான கலப்பையை   அடையாளமாக வைத்துக்  கொண்டிருக்கும் இவருடைய சேவை தொடர வேண்டும்  என்று கூறி வாழ்த்தினார்….  விழாவில்  பச்சை  தமிழகம் கட்சி  தலைவர் சுப.  உதயகுமார் கலந்துகொண்டு பேசினார்.  ரஜகை   பங்குத்தந்தை அமல்ராஜ் ஜோசப்சந்திரன் அழகை பங்குத்தந்தை நெல்சன் பால்ராஜ் ஆகியோரும் உரையாற்றினார்கள்..  ரஜகை  தலைவர் D.G.Cவிட்மன், செல்வதாஸ்   அழகை  ஸ்பெல்மன்   ;  பிரிட்டோ.. ஜெபர்சன், DR.  கார்டியா,  APMசெல்வகுமார்.. Cape institute chairman ஐயப்பா கார்த்திக்..  கனி கனிசசிகலா… சிவ பன்னீர் செல்வன், மாடன்பிள்ளைதர்மம்   பால்வண்ணன்,.
S. Sகுட்டி,   அஞ்சைஜெயக்கொடி, கலப்பைசெயலாளர் சதீஷ் ராஜா, நாய்க்குட்டி கதாநாயகன் செல்வின்,  வேல்பவன் அழகுவேல் விழாவிற்கு ஒத்துழைப்பு கொடுத்த  அஞ்சை ஸ்போட்ஸ் கிளப் அழகை ஸ்போட்ஸ் கிளப்  ரஜகை ஸ்போட்ஸ் கிளப் ஆகியோருக்கு நன்றி கூறினார்கள்… கலப்பை மக்கள் இயக்கம் சார்பாக S. A. V  பாலகிருஷ்ணா பள்ளி மாணவ மாணவிகளின்   கிராமியக் கலை  நிகழ்ச்சிகள் வந்திருந்த பார்வையாளர்கள் அனைவரையும் கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது இதை பள்ளியின்  முதல்வர் திவாகர் அவர்கள்  வழி நடத்தினார்கள்… விழாவில்
பங்கேற்ற அணைத்து பெண்களுக்கும் சேலைகளும் பொங்கல் பரிசுகளும் வழங்கப்பட்டது …
இறுதியாக கலப்பை மக்கள் இயக்கத்தின் நிறுவன தலைவர் PT செல்வகுமார் நன்றியுரை கூறினார் …
இந்த விழா பொதுமக்களிடையே வெகுவாக கொண்டாடப்பட்டது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img