spot_img
HomeNewsஒரு பக்காவான கமர்ஷியல் படம் “சீறு”.

ஒரு பக்காவான கமர்ஷியல் படம் “சீறு”.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான கருத்துக்கள் கொண்ட படங்களை,  ரசிகர்களை கவரும் வகையில் வெற்றிப்படங்களாக தந்து வரும் Vels Films International சார்பில் Dr. ஐசரி K கணேஷ் தயாரித்துள்ள புதிய திரைப்படம் “சீறு”. நடிகர் ஜீவா நாயகனாக நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் ரத்ன சிவா எழுதி, இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜீவா ஜோடியாக நடிகை  ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார். நவ்தீப் வில்லன் வேடத்தில் நடிக்க, வருண் மற்றும் காயத்ரி கிருஷ்ணா, சாந்தினி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

இச்சந்திப்பில் நிர்வாக தயாரிப்பாளர் அஷ்வின் பேசியது…

கடந்த வருடம் எங்கள் நிறுவனம் சார்பில்  “எல்.கே.ஜி” படத்தை பிப்ரவரியில் தான் ரிலீஸ் செய்தோம். இந்த வருடம் “சீறு”படத்துடன் ஆரம்பித்துள்ளோம். தரமான ஆக்‌ஷன் கலந்த, கமர்ஷியல் படமாக எடுத்திருக்கிறோம். இந்தப்படத்தின் பெரும் பலம் ஜீவா தான் அருமையாக நடித்துள்ளார். இயக்குநர் கலக்கலான கமர்ஷியல் படமாக இயக்கியுள்ளார். இந்த வருடமும் தொடர்ந்து நல்ல படங்கள் தருவோம். இந்தப்படம் அனைவரையும் கவரும் நன்றி.

நடிகை சாந்தினி பேசியது…

நான் படம் நடிக்கும் ஐடியாவிலேயே இல்லை.   இயக்குநர் ரத்னா சிவா தான் கட்டாயப்படுத்தி நடிக்க வைத்தார். அவர் இந்தக் கேரக்டருக்காக நிறைய உழைத்திருந்தார். அதை நியாயம் செய்ய நினைத்தேன். அதற்கு படக்குழு மிகவும் உதவினார்கள். நடிகர் ஜீவாவை எனக்கு பிடிக்கும். இந்தப்படத்தில் எல்லோருடனும் இணைந்து பணிபுரிந்தது மகிழ்ச்சி. படம் நன்றாக வந்துள்ளது. எல்லோரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் வருண் பேசியது…

இந்தப்படத்தில் மல்லி எனும் கதாப்பாத்திரம் செய்துள்ளேன். இயக்குநர் சொன்ன மாதிரி வெயிட் போட்டு உடலை மாற்றி நடித்துள்ளேன். ஜீவாவுடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. இந்தப்படம் பார்த்தால் மல்லி பாத்திரம் கண்டிப்பாக உங்கள் மனதில் இடம் பிடிக்கும் பாத்திரமாக இருக்கும். படம் பாருங்கள் ஆதரவு தாருங்கள் நன்றி.

நாயகி ரியா சுமன் பேசியது ….

முதன் முதலாக தமிழ் மக்களை சந்திப்பது மகிழ்ச்சி. எனக்கு இந்தக் கதாப்பாத்திரம் தந்ததற்கு இயக்குநருக்கு நன்றி. இயக்குநருக்கு நடிக்கும் திறமை இருக்கிறது. அவர் ஸ்பாட்டில் நடித்து காட்டி அவ்வளவு எளிதாக சொல்லித்தருவார். ஜீவா படப்பிடிப்பில் மிகப்பெரும் ஆதரவாக இருந்தார். இந்தப்படத்தில் நடித்தது மிகப்பெரும் மகிழ்ச்சி. படம் பக்கா கமர்ஷியலாக வந்துள்ளது. படம் எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.

இசையமைப்பாளர் D. இமான் பேசியது….

வேல்ஸ் ஃபிலிம்ஸ்ல் வேலை செய்வது என் வீட்டில் வேலை செய்வது போன்று இருக்கும்.  வருண் இந்தப்படத்தில் வேறு மாதிரி ஆளாக மாறியுள்ளார் அவருக்கு வாழ்த்துகள். ஜீவா கச்சிதமாக நடிப்பவர். மிகவும் துல்லியமாக தேவையானதை திரையில் நடிக்கக்கூடியவர் அவர். அவர் படத்தில் வேலை செய்வது மகிழ்ச்சி. இயக்குநர் ரத்னா சிவாவுடன் முந்தைய படத்தில் வேலை செய்த பாடல்கள் இப்போதும் பலரது விருப்ப பாடல்களாக உள்ளது. நிறைய சுதந்திரம் தருபவர். திரைக்கதையில் பாடலுக்கான இடம் தருபவர். இந்தப்படத்தின் பாடல்களும் அனைவருக்கும் பிடிக்கும். மிக சுதந்திரமாக இந்தப்படத்தில் வேலை பார்த்தேன் அதற்காக அனைவருக்கும் நன்றி. நொச்சிபட்டி திருமூர்த்தியை இந்தப்படத்தில் பாடவைத்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது. ராஜகணபதி என்பவர் அருமையாக பாடியுள்ளார். இந்த மாதிரி பாடகர்களை அறிமுகப்படுத்துவது தான் மனதிற்கு மிக மகிழ்ச்சி தருவதாக இருக்கிறது. எல்லோருக்கும் வாழ்த்துகள் நன்றி.

இயக்குநர் ரத்ன சிவா பேசியது….

இது மூன்றாவது படம். முதலில் அஷ்வினுடன் கதை சொன்ன போது எந்த ஹீரோவை வைத்து செய்யலாம் என பேசினோம். ஒரு ஆக்‌ஷன் ஹீரோ வேண்டும் என்று ஜீவாவிடம் போனேன். கதை கேட்டவுடன் நாம் பண்ணலாம் என்று சொன்னார். ஐசரி கணேஷ் சாரிடம் கதை சொல்ல பயமாக இருந்தது. ஆனால் அவர் கதை கேட்டு இது ஹிட்டாகும் என்றார். எளிதில் எந்த ஒரு விசயத்தையும் தீர்மாணிப்பவராக அவர் இருக்கிறார். அஷ்வின் மொத்த படத்திற்கும் மிகப்பெரும் ஆதரவாக இருந்தார். நான் ஜீவா சாரின் ரசிகன். 24 மணி நேரமும் சிரித்துகொண்டே, அருகில் இருக்கிறவர்களையும் சிரிக்க வைத்துக்கொண்டிருப்பார். சீரியஸ் காட்சி வந்துவிட்டால் அப்படியே மாறிவிடுவார். அவர் ஒரு அருமையான நடிகர். அவருக்கு நன்றி. வருண் ஜெயிக்க வேண்டும் என்பதற்கு  வெறியாக உழைக்க தயாராக இருக்கும் ஆள். இந்த கேரக்டருக்கு நியாயம் செய்ய மொத்தமாக உடலை மாற்றி வந்தார். மிகப்பெரிய நடிகராக வருவார். சாந்தினி முதலில் நடிக்க மறுத்தார் ஆனால் கதை கேட்ட பிறகு நடிக்க ஒத்துக்கொண்டார். இந்தப்படத்தில் எல்லோர் மனதிலும் கண்டிப்பாக நிற்பார். இமான் சார் இந்தப்படத்திற்கு மிகப்பெரிய பலம். அவர் யாருடன் படம் செய்தாலும் கண்டிப்பாக வெற்றிப்பாடலாகத் தான் இருக்கும். என் தொழில்நுட்ப கலைஞர்கள் என் நண்பர்கள் போன்றவர்கள் கடுமையாக உழைத்துள்ளார்கள். ஹீரோயினுக்கு தமிழ் தெரியாது. ஆனால் அருமையாக நடித்துள்ளார். வா வாசுகி பாடல் அவருக்கு திருப்புமுனையாக இருக்கும். இந்தப்படம் வரும் 7ந்தேதி வருகிறது. இந்தப்படம் நல்ல கருத்துள்ள படம். உங்கள் ஆதரவு தேவை நன்றி.

தயாரிப்பாளர் Dr. ஐசரி K கணேஷ்  பேசியது….

“சீறு” எங்கள் நிறுவனத்தின் 4 வது படம். கடந்த வருடம் மூன்று படங்கள் ஹிட்டாக அமைந்தது. இந்தப்படமும் ஹிட்டாக அமையும். என் பள்ளியில் ஜீவாவின் மகன் படிக்கிறார். அவருடன் படம் செய்யலாம் என்று அங்கு சந்திக்கும்போது சொன்னேன். அவர் இயக்குநர் ரத்ன சிவாவை அனுப்பி வைத்தார். எங்கள் நிறுவனத்தில் கதை இலாக இருக்கிறது. அவர்கள் கதை கேட்டார்கள் அவர்கள் அனைவருக்கும் கதை பிடித்து இருந்தது. அவர் சொன்ன மாதிரியே படத்தை எடுத்து தந்துள்ளார். என் படமாகவே இருந்தாலும் நல்லா இல்லை என்றால் சொல்லிவிடுவேன். ஆனால் இந்தப்படம் என்னை பாதித்தது. அருமையாக எடுத்திருக்கிறார். ஜீவா கடுமையாக உழைத்து நடித்துள்ளார். வருண் இந்தப்படத்தில் தன்னை மாற்றி நடித்துள்ளார்.
அவருக்கு வாழ்த்துகள். நல்ல தரமான படங்களை தர வேண்டும் என்பது தான் எங்கள் குறிக்கோள். நாங்களே இந்தப்படத்தை ரிலீஸ் செய்கிறோம். இந்தப்படம் கண்டிப்பாக தரமான படமாக இருக்கும். எல்லாம் கலந்த கமர்ஷியல் படமாக இந்தபடம் உள்ளது. எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகர் ஜீவா பேசியது ….

ரொம்ப சந்தோஷமாக இருக்கு. படத்தை எடுப்பதை விட அதை கொண்டு சேர்ப்பது இன்றைய காலகட்டத்தில் பெரிய வேலை. இங்கு நிறைய படத்திற்காக வந்துள்ளேன் படம் நல்லா இல்லை என்றால் தர்மசங்கடமாக இருக்கும். ஆனால் இன்று மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. சுற்றி நிறைய நல்ல விசயங்கள் நடக்கிறது. இந்தப்படத்தில் கேபிள் டீவி ஆப்ரேட்டராக, துள்ளலான இளைஞனாக நடித்திருக்கிறேன். திரைக்கதை அட்டகாசமாக இருக்கிறது. இயக்குநருக்கு பயங்கரமாக கதை சொல்லும் திறமை இருக்கிறது. அவர் யாரிடம் வேண்டுமானாலும் கதை சொல்லி ஓகே வாங்கி விடுவார். அவ்வளவு திறமையானவர். இந்தப்படம் ஒரு பக்காவான கமர்ஷியல் படம். எல்லாவிததத்திலும் அனைவரையும் சந்தோஷப்படுத்தும் படமாக இருக்கும். 83 பட புரமோஷனில் கச்சேரி, கச்சேரி பாடல் ரன்வீர் கேட்டு வாங்கி ஆடினார். இமான் சார் பாடல்கள் பற்றி அவர் பெருமையாக பேசினார். இந்தப்படத்தில் வா வாசுகி எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்தப்படத்திற்கு இமான்  பெரும் பலமாக இருக்கிறார். சாந்தினி காட்சிகள் அருமையாக இருந்தது. அவர் அற்புதமாக நடித்துள்ளார். இந்தப்படம் வேல்ஸ் ஃபிலிம்ஸ்ல் நடித்தது எனக்கு சந்தோஷம். இன்னும் நிறைய படங்கள் உங்களுடன் செய்ய வேண்டும். வருண் நடித்த ரோலில்  முதலில் நானே அவரை வேண்டாம் என்று சொன்னேன். கரடு முரடான கேரக்டர் ஆனால் கடுமையாக உழைத்து அசத்திவிட்டார்.  ரியா சுமன் ஜிப்ஸிக்கு ஆடிசன் செய்திருந்ததாக என்னிடம்  சொன்னார். ஆனால் அந்தபடம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை இது தான் முதலில் ரிலீஸ் ஆகிறது. இந்தப்படத்தில் அனைத்து அம்சங்களும் கலந்து இருக்கிறது. அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

எழுத்து இயக்கம் – ரத்ன சிவா

இசை – D.இமான்

ஒளிப்பதிவு – பிரசன்னா S குமார்

படத்தொகுப்பு – லாரன்ஸ் கிஷோர்

கலை இயக்கம் – சம்பத் திலக்

சண்டைப்பயிற்சி – கணேஷ் குமார்

மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, D One

தயாரிப்பு –  Dr. ஐசரி K கணேஷ்.

தயாரிப்பு நிறுவனம் – Vels Films International

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img