spot_img
HomeNews2020 பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகவுள்ள ஓ மை கடவுளே”

2020 பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகவுள்ள ஓ மை கடவுளே”

காதலர் தினத்தன்று காதலை ஃப்ரஷ்ஷாக சொல்லும்,
இளமை துள்ளும் காதல் படைப்பாக வெளிவரவுள்ளது  “ஓ மை கடவுளே”. இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். விஜய் செதுபதி மற்றும் கௌதம் மேனன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். பிப்ர்வரி 14 காதலர் தினத்தன்று இப்படம் வெளியாகவுள்ள நிலையில் நாயகன் அசோக் செல்வன் மற்றும் நாயகி ரித்திகா சிங் ஆகியோர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

நடிகர் அசோக் செல்வன் கூறியதாவது…

“ஓ மை கடவுளே” என் வாழ்வில்  முக்கியமான படம். பல  வருடமாக இயக்குநர் அஷ்வத்தை  எனக்கு தெரியும். ரெண்டு பேரும் சேர்ந்து படம் பண்ணலாம்னு பேசியிருந்தோம். தமிழில் ரொமான்ஸ் கதைகள் வந்து ரொம்ப நாள் ஆயிடுச்சு. அதனால காதல் கதை பண்ணலாம்னு முடிவு பண்ணி பண்ணதுதான் இந்தப்படம். படத்தில் நாயகி ரோல் முக்கியமானது.  ரித்திகா சிங் பண்ணினா நல்லாருக்கும்னு இரண்டு பேரும் நினைத்தோம். அவங்க தேர்ந்தெடுத்து படங்கள் பண்ணிட்டு இருந்தாங்க. அதனால ஒத்துக்குவாங்களானு ஒரு தயக்கம் இருந்தது. ஆனா கதை கேட்டதும் அவங்களுக்கு பிடிச்சது. படமே அவங்கள சுத்திதான் நடக்கும். ரித்திகா மிக நட்பாக இருந்தார் அது நடிக்கும் போது எனக்கு உதவியாக இருந்தது. வாணி போஜனுக்கு ஒரு முக்கியமான ரோல். அவங்களுக்கு இது தமிழ்ல முதல் படம்  நல்லா பண்ணியிருக்காங்க. அப்புறம் படத்தில் முக்கியமான பாத்திரம் ஒன்னு இருக்கு. அதுக்கு விஜய் செதுபதி அண்ணாகிட்ட கேட்டோம். அவருக்கு பெரிய மனசு எளிமையா வந்து நடிச்சு கொடுத்திட்டு போயிட்டார். விஜய் சேதுபதி இந்தப்படத்தில் கடவுளாக நடிக்கிறார். மற்றதெல்லாம் திரையில் பாருங்கள். எனக்கு நிறைய வித்தியாசமான கேரக்டர் கதைகள் செய்ய ஆசை. இப்போது காதல் கதைகள் எதுவும் வருவதில்லை அதனால் இந்தப்படம் செய்யலாம் எனத் தோன்றியது. அக்கா அபிநயா செல்வம் அவர்தான் இந்தகதையை முதலில் நம்பினார். அப்புறம்  டில்லி பாபு சார் ராட்சசன் படத்திற்கு பிறகு இப்படத்தை நம்பி எடுத்தார். இருவருக்கும் எனது நன்றி. டீஸருக்கு கிடைத்த வரவேற்பு நாங்களே எதிர்பார்க்காதது. படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. எல்லாருக்கும் பிடிக்கும்.

நடிகை ரித்திகா சிங் கூறியதாவது…

அதிகமாக படங்கள் செய்வதில்லை. நல்ல படங்கள் மட்டுமே செய்யலாம்னு வெயிட் பண்ணேன். வாய்ப்புகள் வந்தாலும் தேர்ந்தெடுத்து பிடித்ததை செய்தால் போதுமென்று நினைத்தேன். இந்தக்கதை கேட்டு பிடிச்சது. இந்தக்கேரக்டர் ரொம்ப பிடிச்சது. அசோக்செல்வன் நடிக்கும்போது ரொம்ப உதவியா இருந்தார். விஜய் சேதுபதி கூட எனக்கு காட்சிகள் இல்ல. ஆனால் படப்பிடிப்பில் சென்று ஒரு நாள் அவரை சந்தித்தேன். அவருடன் “ஆண்டவன் கட்டளை” நடித்திருக்கிறேன். நிறைய பேசினோம். ரொம்ப சந்தோஷமாக இருந்தது. நான் செய்யும் பாத்திரங்கள் எனக்கு பிடிக்க வேண்டும் படம் ஓடுகிறதா, இல்லையா, என்பது வேறு விசயம். செய்யும் வேலையில் மகிழ்ச்சியாக நாம் இருக்க வேண்டும். இபடத்தில் மிக சந்தோஷமாக இருந்தேன். படம் இளைஞர்களை ஈர்க்கும்படி அமைந்துள்ளது. எல்லோருக்கும் பிடிக்கும்.

2020 பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகவுள்ள இப்படம் சென்சார் ஃபோர்டில் U/A சர்டிஃபிகேட் பெற்றுள்ளது. இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்கியுள்ள இப்படத்தை Axess Film Factory  சார்பில் தயாரிப்பாளர் G. டில்லிபாபு Happy High Pictures அபிநயா செல்வமுடன் இணைந்து  தயாரித்துள்ளார். Sakthi Film Factory இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

வாணி போஜன், M S பாஸ்கர், ஷா ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

எழுத்து , இயக்கம் – அஷ்வத் மாரிமுத்து

இசை – லியான் ஜேம்ஸ்

ஒளிப்பதிவு – விது அயன்னா

படத்தொகுப்பு  – பூபதி செல்வராஜ்

கலை இயக்கம் – இராமலிங்கம்

உடை வடிவமைப்பு – தினேஷ் மனோகரன்

உடைகள் – முகம்மது சுபையர்

சண்டைப் பயிற்சி – ராம்குமார்

பாடல்கள் – கோ சேஷா

புகைப்படம் – ராஜா

தயாரிப்பு மேற்பார்வை – சேதுராமலிங்கம், பூர்னேஷ்

நிர்வாக தயாரிப்பு – நோவா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img