கோலிவுட்டில் ஒரு புது வரவு நடிகர் வர்மா

0
191

நடிகர் வர்மா, கோலிவுட்டில் ஒரு புது வரவு. நடிப்பின் மீது கொண்ட பற்றினால் இவர் ஆரம்ப காலத்தில் ஒரு பிரபல நடிப்பு பயிற்சி பள்ளியில் இரண்டு வருடங்களாக நடிப்பு பயின்றார். எந்த பின்புலமும் இல்லாமல் அவர் மேற்கொண்ட கடின முயற்சிகளால் சினிமா துறையில் புகழ்பெற்ற இயக்குனர்களின் படங்களான தீரன், காளி, தடம், இரும்புத்திரை, தமிழ் படம் 2 ஆகிய படங்களில் வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. சமீபத்தில் வெளியான கேடி (எ) கருப்புதுரை, ஹீரோ மற்றும் பஞ்சராக்ஷரம் போன்ற நன்கு பேசப்பட்ட படங்களில் அவரது நடிப்பு வெகுஜன மக்களை கவர்ந்தது. இப்பொழுது நடிகர் வர்மா அறிமுக இயக்குனர்  தீனதயாளன் அவர்களின் வளர்ந்து வரும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.