கடவுளைப் போல் தன் மகனே காப்பாற்றும் தந்தையின் கதை காட்பாதர் ஒரு அபார்ட்மென்ட்டில் நடக்கும் த்ரில்லர் படம். நல்ல வேலை, அழகான மனைவி, குழந்தை என்று திருப்திக்கரமான நடுத்தர குடும்பத்து மனிதராக வாழ்ந்து வரும் நட்டி
சக்தி வாய்ந்த சிங்கம் மானை வேட்டையாடத் துடிப்பது தான் காட் ஃபாதர். கேங்ஸ்டர் லால் மகன் கொஞ்சம், கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கிறான். அவனை காப்பாற்ற அதே வயதுடைய பையனின் உடல் உறுப்புகளை பொருத்த வேண்டும். அப்பொழுது நட்டி மகனான அஸ்வந்தைகண்டுபிடிக்கிறார்கள். அஸ்வந்தை கடத்தி அவரின் உடல் பாகங்களை எடுக்க முடிவு செய்கிறார்கள். நட்டி வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து யாரையும் உள்ளேயும் செல்லவிடாமலும், வெளியேயும் செல்லவிடாமலும் அராஜகம் செய்யும் ரவுடிகளிடம் இருந்து தன் மகனை எத்தனை நாட்கள் தான் காப்பாற்கிறார் , என்பதே கதை
.நட்டி, பாசமான அப்பாவாகவும், அன்பான கணவனாகவும் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் லால் அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் அனன்யா,அளவான நடிப்பு மூலம் தனது கதாப்பாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
மகனை காக்க எதையும் செய்யத் தயாராக இருக்கும் இரண்டு தந்தைகள். சரியான அளவில் ஆக்ஷன், சென்ட்மென்ட் காட்சிகளை வைத்து நம்மை இருக்கையின் நுனிக்கு வந்து படம் பார்க்க வைக்கிறார் இயக்குநர் தொடக்கம் முதல் முடியும் வரை, விறுவிறுப்பு குறையாத வகையில் திரைக்கதை அமைத்ததோடு, ரசிகர்களை படபடப்பாகவும், அடுத்த என்ன நடக்கும், என்ற எதிர்ப்பார்ப்புடனும் படம் முழுவதும் வைத்திருப்பது படத்தின் பலம்.
Cast:
Natty as Adhiyaman
Ananya as Mithra
Lal as Maruthasingam
Aswanth as Arjun
Marimuthu as Sakthivel
Crew:
Director : Jegan Rajshekar
Dop : N.Shanmuga Sundaram
Editor : Bhuvan Srinivasan
Music : Naviin Ravindran
Art : ArunShankar Durai
Stunt : PC
Costume Designer : Bharathi
Lyrics : Tamilmani
Pubicity Designs : Dinesh Ashok
Stills : M.Dinesh
PRO : Nikhil
Producer : GS Arts & Firstclap
Audio on : Lahari Music