spot_img
HomeNewsநான் அழுதுவிடுவேன் என மிக பயந்தேன்''நடிகர் கரண் தக்கர் ! ''

நான் அழுதுவிடுவேன் என மிக பயந்தேன்”நடிகர் கரண் தக்கர் ! ”

நான் அழுதுவிடுவேன் என மிக பயந்தேன் – Hotstar Specials வழங்கும் ஸ்பெஷல் ஆப்ஸ்” ( Special Ops )  இணைய தொடரில் நடித்தது குறித்து நடிகர் கரண் தக்கர் ! 

19 வருடங்கள், 12 நாடுகள், 6 உளவாளிகள், ஒரு அசகாய சூத்திரதாரி. Hotstar Specials நிறுவனம் Friday Storytellers – the digital arm of Friday Filmworks உடன் இணைந்து வழங்கும் 2020ன் இந்தியாவின் மிகப்பிரமாண்டமான உளவுவகை திரில்லர் இணைய தொடர் “ஸ்பெஷல் ஆப்ஸ்” ( Special Ops ). பரபரப்பு மிக்க 8 எபிஸோடுகள் கொண்ட இந்த இணைய தொடர் கடந்த 19 வருடங்களில் இந்தியாவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு காரணமானவர்களை இந்திய உளவுத்துறை வேட்டையாடிதை மையமாக கொண்டது. உண்மையில் நடந்த பல சம்பவங்களின் பின்னணியில் இத்தொடர் கட்டமைக்கப்பட்டுள்ளது. Special ops பற்றிய தீவிர ஆய்வுகளை பல ஆண்டுகளாக மேற்கொண்டு, பல நுண்ணிய விவரங்களுடன் நீரஜ் பாண்டே , தீபக் கிங்ராணி, பெனாஷிர் அலி ஃபிடா ஆகியோர் இத்தொடரின் திரைக்கதையை எழுதியுள்ளனர். உலகின் பல முக்கியமான இடங்களில்  துருக்கி, ஆஜர்பெய்ஜான், ஜோர்டன் முதலான நகரங்கள் உட்பட பலவிதமான லொகேஷன்களில் இத்தொடர் படம்பிடிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் நீரஜ் பாண்டே இத்தொடரை உருவாக்கியுள்ளார்.

இத்தொடரில் தொலைக்காட்சியில் மிகபிரபலமாக விளங்கும் கரண் தக்கர் முற்றிலும் புதிய ஆக்‌ஷன் அவதாரத்தில் உளவுத்துறை அதிகாரியாக நடிக்கிறார். இத்தொடருக்காக அவர் பல கடினமான ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்திருக்கிறார். உயரமான இடங்களில்  இருப்பதில் பயந்த சுபாவம் கொண்ட இவர், இத்தொடரில் ஒரு காட்சியில் 25 மாடியின் உச்சத்தில் ஒரு ஆக்‌ஷன் காட்சியில் நடித்திருக்கிறார்.

கடும் பயத்துடன் தான்  நடித்த அனுபத்தை பற்றி கரண் தக்கர் பகிர்ந்து கொண்டதாவது…

எனக்கு உயரம் என்றாலே கடும் பயம். இத்தொடரில் அந்த காட்சியை இரவில், முழு இருட்டில் எடுத்தார்கள். அது இன்னும் பயத்தை அதிகப்படுத்தியது. இயக்குநர் நீரஜ்  சார் உயரம் பற்றிய எனது பயத்தை அறிந்து,  ஸ்டண்ட் டபுள் (டூப் ) வைத்து எடுக்கலாம் என கூறினார். ஆனால் எனது பயத்தை எதிர்த்து கடக்கலாம் என நானே செய்கிறேன் எனக்கூறினேன். உயரத்தின் மீதான எனது பயத்தை கடந்து நடித்தது உடலளவிலும் மனதளவிலும் கடும் நெருக்கடியை தந்தது. 25 மாடியில் உச்சியில் கட்டிட நுணியில் எனது இடத்தை அடைந்த போது கடுமையான பயம் தொற்றிக்கொண்டது, பயத்தில் என் கண்களில் கண்ணீர் தளும்ப ஆரம்பித்துவிட்டது. மொத்த படக்குழுவின் முன்னால் எனக்கு மிக கூச்சமாக இருந்தது. ஆனால் எல்லாவற்றையும் கடந்து அந்த காட்சியை செய்தது எனக்கு சந்தோஷமே. இப்போது அதனை திரையில் காணும் போது பெருமையாக இருக்கிறது என்றார்

Hotstar Specials வழங்கும் இந்த ஸ்பெஷல் ஆப்ஸ்” ( Special Ops ) இணையத்தொடரில் இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களான கே கே மேனன், திவ்யா தத்தா, வினய் பதக், கரண் தக்கர், சஜ்ஜத் டெலஃபுரூஷ், சனா கான், சய்யாமிகெர், மெஹர் விஜ், விபுல் குப்தா, பர்மித் சேதி, கௌதமி கவுர், முசாமில் இப்ராஹிம், ஆகியோருடன் மேலும் பலர் நடித்துள்ளனர். 2001 ல் இந்திய பாரளுமன்றத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஆரம்பித்து அத்றகு முன் 26/11 காஷ்மீர் தாக்குதல் உட்பட பல உண்மை சம்பவங்களை கொண்டு இத்தொடர் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த தாக்குதல்களுக்கெல்லாம் பின்னுள்ள ஒரு அசகாய சூத்திரதாரியை தேடிய, இந்திய உளவுத்துறை வரலாற்றின் மிகப்பெரிய தேடுதல் வேட்டை தான் இந்தத்தொடர்.

Hotstar Specials வழங்கும் இந்த “ஸ்பெஷல் ஆப்ஸ்” ( Special Ops ) இணையத்தொடர் 17 மார்ச் 2020 பல மொழிகளில் Hotstar VIP தளத்தில் வெளியாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img