spot_img
HomeNewsகாதலர் தினத்தை மீண்டும் கொண்டு வந்த “ஹே லவ் ஜோஷ்வா” பாடல் ! 

காதலர் தினத்தை மீண்டும் கொண்டு வந்த “ஹே லவ் ஜோஷ்வா” பாடல் ! 

காதல் மாதம் இப்போது தான் முடிந்திருக்கிறது. ஆனால் ஒரு சிறு பொறி,  எல்லைகள் கடந்து அனைவர் மனதிலும் புகுந்து, காதலை மீட்டுரு செய்து அனவரையும் முணுமுணுக்க செய்திருக்கிறது. அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே பல ஆச்சர்யங்களை தந்து வரும் “ஜோஷ்வா இமை போல் காக்க” படம், இப்போது வெளியிட்ட ஒற்றை பாடலால் நகரை காதலில் மூழ்கடித்திருக்கிறது. காதலின் அழகு, ரொமான்ஸ், நளினம் அனைத்தும் இசை வடிவாக கிடார் மற்றும் வயலினில் பொங்கி வழியும் ஒலியில் “ஹே லவ் ஜோஷ்வா” பாடல் Itunes முதல்  காபி ஷாப் வரை நகரின் வைரல் விருப்பமாக மாறியிருக்கிறது.  கௌதம் மேனனின் பாடல்கள் எப்போதும் உணர்வுகளை கட்டியிழுக்கும் தனித்தன்மையுடன் ஒரு புதிய அனுபவத்தை தருவதாக இருக்கும். இம்முறை பின்னணி பாடகர் கார்த்திக் முதல் முறையாக இசையமைக்க, பாடல்களில் புது ஆத்மா உருவாகியிருக்கிறது. பேச்சுவழக்கு மாறாத வரிகளில், காதலை சொல்லும் பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியிருக்கிறார். பன்முக திறமை வாயந்த இவர், இயக்குநர் கௌதம் மேனனின் “அச்சம் என்பது மடமையடா”  படத்தில் இளைஞர்களின் உள்ளத்தை வென்ற “சோக்காளி” பாடலை இதற்கு முன்பாக எழுதியிருந்தார். இந்தக்கூட்டணிக்கு  “ஹே லவ் ஜோஷ்வா” பாடல் அவர்களின் வெற்றிமகுடத்தில் மற்றுமொரு மயிலிறாகாக இணைந்திருக்கிறது.
கார்த்திக் மற்றும் தேசிய விருது வென்ற ஷாசா திரிபாதி குரல்கள் பாடலுக்கு பெரும் அழகை கொண்டு வந்திருக்கிறது. குறிப்பாக வெளியான பாடல் வீடியோவில் கார்த்திக் கௌதமுடம் இணைந்து இசையமைப்பது, முடிவில் இது நன்றாக இருக்கிறதா எனக்கேடக “இதில் நிறைய அதிர்வுகள் இருக்கிறது. நம்பு இது  வெகு உன்னதமகா வரும்” என்று சொல்வது என அனைத்தும் மிக பேரழகாக அமைந்திருக்கிறது.

மிகப்பெரும் இசை ஆச்சர்யங்களை மிக விரைவில்  கொண்டுவரவுள்ளது ஜோஷ்வா திரைப்படம். Vels Film International சார்பில் Dr. ஐசரி K கணேஷ் இப்படத்தை தயாரிக்கிறார். உளவு வகை திரில்லராக உருவாகியுள்ள  இப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் எழுதி இயக்கியுள்ளார்.  வருண் மற்றும் ராஹேய் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப குழு விபரம்

இசை – கார்த்திக்

ஒளிப்பதிவு – SR கதிர்

படத்தொகுப்பு – ஆண்டனி

கலை இயக்கம் – குமார் ஞானப்பன்

உடை வடிவமைப்பு – உத்தாரா மேனன்

சண்டை வடிவமைப்பு – யானிக் பென்

ஒலியமைப்பு – கூத்தன், சுரேன்.G

இத்திரைப்படத்தை 2020 இவ்வாண்டின் மத்தியில் வெளியிட படக்குழு திட்டமிட்டு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img