சசிகுமார் -நிக்கி கல்ராணி நடித்துள்ள “ராஜ வம்சம் ” அக்டோபர் 14 ஆம் தேதி – ஆயுத பூஜை முதல் திரையரங்குகளில் வெளியீடு !
செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டிடி.ராஜா தயாரித்துள்ள ” ராஜ வம்சம் ” படத்தை அறிமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கியுள்ளார் . இந்தப்படத்தில் கதாநாயகனாக இயக்குனர் /நடிகர் சசிகுமார் நடிக்க இவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார் .
தமிழ் சினிமாவில் ஒரு அறிமுக இயக்குனர் 49 நடிகர்களை வைத்து படம் இயக்கியுள்ளது இதுவே முதன்முறை . நட்சத்திர பட்டாளங்களுடன் ஜனரஞ்சகமான படங்களை இயக்குவதில் புகழ்பெற்றவர் இயக்குனர் சுந்தர் C . அவரிடம் உதவி இயக்குனராக பயிற்சி பெற்றவர்தான் கதிர்வேலு .
இந்த படத்தில் ராதா ரவி ,தம்பி ராமைய்யா ,விஜய குமார் , சதிஷ் ,மனோபாலா ரமேஷ் கண்ணா ,சிங்கம் புலி , யோகி பாபு ,கும்கி அஸ்வின் ,ஆடம்ஸ் , சரவணா சக்தி மணி சிலம்பம் சேதுபதி ,ரமணி , ராஜ் கபூர் ,தாஸ் , நமோ நாராயணன், சுந்தர், சாம்ஸ் , சமர் , ரேகா,சுமித்ரா , நிரோஷா ,சந்தான லட்சுமி ,சசிகலா ,யமுனா ,மணி சந்தனா ,மணி மேகலை,மீரா ,லாவண்யா ,ரஞ்சனா,,ரஞ்சிதா ,ரம்யா ,தீபா என 49 கலைஞர்கள் நடித்துள்ளனர் .
சித்தார்த் ஒளிப்பதிவு செய்ய, சாம்.சிஎஸ் இசை அமைத்துள்ளார் .கலை இயக்கம் சுரேஷ் மற்றும் படத்தொகுப்பினை சபு ஜோசப் மேற்கொண்டுள்ளார் .நிர்வாக தயாரிப்பு N .சிவகுமார் , தயாரிப்பு மேற்பார்வை பாண்டியன் பரமசிவம் .
செந்தூர் பிலிம்ஸ் சார்பில் TD ராஜா தயாரித்துள்ள ராஜ வம்சம் அக்டோபர் 14 ஆம் தேதி – ஆயுத பூஜை முதல் திரையரங்குகளில் வெளியாகிறது .