நடுவன்: சினிமா விமர்சனம்

0
67

கொடைக்கானலில் வசிக்கும் கார்த்தி (பரத்) தன் நண்பனுடன் சேர்ந்து ஒரு தேயிலைத் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். ஆனால், நண்பனோ அந்தத் தொழிற்சாலையின் நிர்வாகத்தில் ஈடுபாடு காட்டாமல் எந்நேரமும் குடித்துக்கொண்டிருக்கிறார். அப்போது கார்த்தி, புதிதாக ஒரு இளைஞனை தனது தொழிற்சாலையில் வேலைக்கு அமர்த்துகிறார். அந்த இளைஞன், கார்த்தியின் குடும்ப வாழ்க்கையில் உள்ள ஒரு ரகசியத்தைக் கண்டுபிடிக்கிறான். இதையடுத்து, ஏற்படும் பிரச்னைகள், மோதல்களே மீதிப் படம்.

எல்லோருக்கும் ஒரு முகமூடி இருக்கிறது அதை கழட்டி விட்டு பார்த்தால்,  அனைவருமே அகோரமாகதான் தெரிவார்கள். இங்கு யாருமே உத்தமன் இல்லை. சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக்கொள்ளும் பச்சோந்தி கூட்டம்தான்  என சொல்கிறது இப்படம். ஒரு மலை உச்சியான பனிபடலம் சூழுந்துள்ள ஒரு சிற்றூரின் பின்னணியில் கதை நடக்கிறது. காட்சிகள் பார்க்க அழகாக இருக்கிறது. படத்தின் தொடக்கமே ஒரு பெரிய சஸ்பென்சாக தொடங்குகிறது. ஆரம்ப காட்சிகளில் மிக அழகாக தெரிகிறார் பரத்.

நாயாகி அபர்ணா, கோகுல், ஆனந்த் ஆகியோரின் நடிப்புகளுக்கு பாராட்டுக்கள். ஒரு வீடு, ஒரு ஃபேக்ட்ரி, காடு இவற்றை மட்டும் வைத்து  சிறிய பட்ஜெட்டில் பிசிறு இல்லாமல் நேர்த்தியாக படம் கொடுத்த இயக்குனர் சரண் குமாருக்கு வாழ்த்துக்கள். மொத்தத்தில் படம் கண்வனுக்கு துரோகம் மனைவி. எதிரியாய் மாறும் நண்பன். கொள்ளையடிக்க நினைக்கும் உறவு. இந்த மூன்றுக்கும் நடுவில் சிக்கும் ஒருவனின் கதைதான் நடுவன்