சாம்பலூர் எனும் மலை கிராமத்தில் 9 நாட்கள் மயான கொள்ளை திருவிழா நடக்கிறது. முதலாம் நாள் திருவிழாவில் அந்த ஊரில் இரு பெரும் சம்பவங்கள் நிகழ்கின்றன. சிமெண்ட் ஃபேக்டரி ஒன்று தீக்கிரையாகிறது. அதே நேரத்தில் அந்த கம்பெனியில் வேலை பார்க்கும் யூனியன் லீடர் சண்முகம் மகள் நிலா காணாமல் போகிறாள். காவல்துறை அதிகாரிகளாக ரெஜினா சக்கரவர்த்தி கதை முழுக்க அசத்தலான நடிப்பை மட்டுமின்றி ஆழமான பல எமோஷன்களையும் வெளிப்படுத்தி உள்ளனர். ஃபேக்டர் ஓனர் திரிலோக் வாடியாக வரும் ஹரிஷ் உத்தமன், பார்த்திபனின் மகளாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், நாத்திகவாதியான பார்த்திபனுக்கும் ஆத்திகவாதியான அவரது மனைவிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு இருவரும் பிரிந்து இருப்பது, என கதாபாத்திரங்களும், கதைகளும் பார்ப்பவர்களை சுழன்று அடிக்கச் செய்கிறது யாரை சந்தேகிப்பது, யாரை சந்தேகப்படாமல் இருப்பது என்றே தெரியாத அளவுக்கு திரைக்கதையை அட்டகாசமாக வடிவமைத்துள்ளனர் புஷ்கர் மற்றும் காயத்ரி.ஸ்ரேயா ரெட்டி, பார்த்திபன், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஹரிஷ் உத்தமன், ஸ்ரேயா ரெட்டியின் மகன், ஹரிஷ் உத்தமனின் அப்பா, மசான கொள்ளையர்கள், நரபலி, பள்ளியில் நடக்கும் பாலியல் தொல்லை என ஏகப்பட்ட விஷயங்கள் பல வித சந்தேகங்களை கடைசி வரை எழுப்பி இறுதியில் யார் குற்றவாளி கிளைமேக்ஸ் யாரையும் கண்மூடித் தனமாக நம்பி விடக் கூடாது என்பதை கனமாக மனதில் இறக்குகிறது.