மாயோன் விமர்சனம்

76

டபுள் மீனிங் ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் இசைஞானி இளையராஜா இசையில் உலகம் முழுவதும் வெளியாகியுள்ள திரைப்படம் மாயோன்.

தொல் பொருள் ஆராய்ச்சி நிபுணராக பணிபுரிந்து வருகிறார் நாயகன் சிபி சத்யராஜ். இவர் பழங்கால சிலைகளை திருடி விற்கும் ஹரிஷ் பெராடிவுடன் கூட்டணி வைத்து பணம் சம்பாதித்து வருகிறார் கோவிலுக்குள் உள்ள ஒரு அறையில் புதையல் இருப்பதாக இந்த குழுவுக்கு தெரிய வருகிறது. அதே சமயம் இரவு நேரத்தில் இந்த கோவிலுக்குள் அமானுஷ்ய சக்தி இருப்பதாகவும், இரவில் கோவிலில் இருப்பவர்கள் மன ரீதியாக பாதிக்கப் படுவதாகவும் ஒரு பொது மக்கள் இடையே பரவலாக பேச்சு இருக்கிறது.. சிலை கடத்தல் கும்பலை போலீஸ் ஒரு பக்கம் தேடி வருகிறார்கள். இந்நிலையில்,அந்த புதையலை எடுக்கும் பணியை சிபி சத்யராஜுக்கு ஹரிஷ் பெராடி கொடுக்கிறார். அந்த கோவிலுக்குள் செல்லும் சிபி சத்யராஜுக்கு பல தடைகள் வருகிறது. இறுதியில் சிபி சத்யராஜ் கோவிலுக்குள் சென்று புதையலை எடுத்தாரா? சிலை கடத்தல் கும்பலை போலீஸ் பிடித்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சிபிராஜ், ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை கொடுத்திருக்கிறார். தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்  அருண்மொழி மாணிக்கம் அவர்களின் திரைக்கதை படத்தின் மீதான விறுவிறுப்பை கூட்டியுள்ளது. நாயகியாக நடித்திருக்கும் தான்யா ரவிச்சந்திரன், சிபி சத்யராஜ்க்கு பக்கபலமாக நடித்திருக்கிறார்.

 

ஆன்மீகத்தையும் அறிவியலையும் கலந்து அமைக்கப்பட்ட திரைக்கதைக்கு ஏற்றவாறு இயக்கி இருக்கிறார் இயக்குனர் என்.கிஷோர்.

ஆன்மீகமா இல்லை அறிவியலா\
அறிவியல் சார்ந்த ஆன்மீகமா
இல்லை ஆன்மீகம் சார்ந்த அறிவியலா
என்பதை சொல்லாமல் சொல்லி கடவுள் இருக்காரா  இல்லையா இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில்  படத்தை பார்க்கலாம்