இந்திய குடிமகன் ஒவ்வொருவரின் அடையாளம் ஆதார் அதை தலைப்பாக வைத்துக் கொண்டு கருணாஸ் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம்
ஆதார்
கதை டைட்டில் கார்டு போடும்போது ஒரு கார் விளம்பரத்தை காட்டுகிறார்கள் ஏன் என்று புரியவில்லை
டைட்டில் முடிந்தவுடன் கையில் குழந்தையுடன் கருணாஸ் எழும்பூர் காவல் நிலையத்தை நோக்கி வருகிறார் அரசு மருத்துவமனையில் மகப்பேறு நடந்த என் மனைவி காணவில்லைஎன்று புகார் அளிக்க காவல்துறை அதிகாரிகள் கருணாஸின் மனைவியை தேடி ஒரு அறிக்கையை சமர்ப்பிக்கின்றனர்
அவருடைய மனைவி முன்னாள் காதலன் ஒரு ஆட்டோ டிரைவருடன் ஓடி விட்டதாக இதை கருணாஸ் நம்ப மறுத்து
முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு பெட்டிஷன் போட அந்த பெட்டிஷன் காவல்துறைக்கு வர கருணாஸை அடைத்து உதைத்து மனைவி கள்ளக் காதலனுடன் ஓடி விட்டதே நீதிமன்றம் மூலம் உறுதி செய்துகொள்கின்றனர்
காவல் சொன்னது நிஜமா?
கருணாஸ் தன் மனைவி மேல் வைத்திருக்கும் நம்பிக்கை நிஜமா?
என்று நாம் நினைக்கும் எனக்கு முன் ஒரு அதிர்ச்சி சம்பவத்தை நம் முன் நிறுத்துகிறார் இயக்குனர்
அது என்ன ?
விடை காணுங்கள் ஆதார்
கொத்தனார் வேலை செய்யும் ஒரு சாமானியனாக கருணாஸ் கையில் குழந்தையுடன் பரிதவிக்கும் காட்சியில் தான் கதையின் நாயகன் என்பதை நிரூபித்து விட்டார்
நாயக ரித்திகா காட்சிகள் குறைவு என்றாலும் நடிப்பில் நிறைவு செய்து விட்டார்
அருண் பாண்டியன் தலைமை காவலராக சோகமான முகத்துடன் படம் முழுக்க நடிக்க அந்த சோகத்தின் காரணம் என்ன
நமக்கு தெரிய வர அவர் இறந்தது தற்கொலையா இல்லை கொலையா என்பதை நமக்கு புரிய வைக்க இயக்குனர் மறந்து விட்டார்
ஒரு காவல் அதிகாரி நினைத்தால் ஒரு மனிதனின் ஆதாரை எப்படி எல்லாம் மாற்ற முடியும் என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்து சொன்ன இயக்குனருக்கு பாராட்டுக்கள்
ஒளிப்பதிவாளர் பாராட்டியாக வேண்டும் முக்கால்வாசி படம் இருட்டிலே நடக்கிறது காரணம் காட்சிகள் இரவில் நடப்பதாக இயக்குனர் காட்டியிருப்பதால்
இனியா இவர் நல்லவரா கெட்டவரா என்று தெரியாமலே செத்துப் போகிறார்
திரைப்படத்தை ஒரு நாவல் படிப்பது போல் எடுத்துச் சென்றிருக்கும் இயக்குனர் சில இடங்களில் தெளிவில்லாமல் நம்மை குழப்புகிறார்
ஆதார்
சி 7 போலீஸ் ஸ்டேஷன் எழும்பூர்