spot_img
HomeNewsகாஜல் அகர்வாலின் ‘கோஸ்டி டீசர் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது!

காஜல் அகர்வாலின் ‘கோஸ்டி டீசர் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது!

சீட் பிக்சர்ஸ் (Seed pictures) வழங்கும் கல்யாண் இயக்கத்தில் நடிகை காஜல் அகர்வாலின் ‘கோஸ்டி’ (Ghosty) டீசர் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது!

கல்யாண் இயக்கத்தில் சீட் பிக்சர்ஸ் வழங்கும் காமெடி இன்வஸ்டிகேஷன் த்ரில்லராக உருவாகி இருக்கும் நடிகை காஜல் அகர்வாலின் ‘கோஸ்டி’ திரைப்பட டீசர் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

மேலே சொன்னது போல படம் இன்வஸ்டிகேஷன் த்ரில்லராக மனநல மருத்துவமனையை பின்னணியாக கொண்டு உருவாகி இருக்கிறது. கதையில் சஸ்பென்ஸ் காமெடி என அனைத்து வயதினருக்கும் ஏற்றபடி திரையுலகின் முக்கிய நகைச்சுவை நடிகர்களையும் கொண்டு படமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இறுதியில் நடிகர் யோகிபாபுவுக்கும் படத்தில் வரும் குழந்தைக்கும் இடையில் வரக்கூடிய வசனங்கள் நிச்சயம் பார்வையாளர்களுக்கு பிடித்த வகையில் அமையும். திரையரங்குகளில் படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து விரைவில் தெரிவிக்கப்படும்.

கதையின் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்க, யோகி பாபு, கே.எஸ். ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லே, தங்கதுரை, ஜெகன், ஊர்வசி, சத்யன், ‘ஆடுகளம்’ நரேன், மனோபாலா, மொட்ட ராஜேந்திரன், மயில்சாமி, சாமிநாதன், தேவதர்ஷினி, சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு அருணாச்சலம், லிவிங்ஸ்டன், சந்தான பாரதி, மதன் பாபு மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.

படத்தின் தொழில்நுட்பக் குழு விவரம்:

இயக்குநர்: ‘குலேபாகவலி’, ‘ஜாக்பாட்’ படங்கள் புகழ் கல்யாண்,
ஒளிப்பதிவு: ஜாக்கப் ரத்தினராஜ்,
எடிட்டர்: விஜய் வேலுக்குட்டி,
இசையமைப்பாளர்: சாம் சி.எஸ்.,
கலை இயக்கம்: கோபி,
சண்டைப் பயிற்சி: பில்லா ஜெகன்,
VFX மேற்பார்வை: V. தினேஷ் குமார்,
எக்ஸிக்யூடிவ் புரொடியூசர்: குமார்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா- ரேகா (D’One)

Teaser Link – https://www.youtube.com/watch?v=DImX45w-qgc

Must Read

spot_img