வாழ்க்கை என்பது பெற்றுத் தாளில் இருக்கும் ஒரு புள்ளி
அந்தப் புள்ளியின் ஆயுள் காலம் நம்ம படைத்தவனைத் தவிர வேறு யாரும் அறிய முடியாது அந்த புள்ளி மறைவதற்குள் நாம் ஆடும் ஆட்டம் கொஞ்சம் நெஞ்சம் இல்ல
நான் பெரியவன் நீ பெரியவன் நான் அழகாகவன் நீ அழகில்லாதவன் இப்படி ஏகப்பட்ட ஈகோ குள் மனிதன் வாழும் உலகில் நிச்சயிக்கப்பட்ட மரணத்தைத் தவிர வேறு எதுவும் நிஜமில்லை
வாழும் வரை வாழ்க்கையில் அனுபவித்து வாழ வேண்டும் என்பதை திரைக்கதையின் மூலம் நமக்கு உணர்த்தியிருக்கும் படம் தான் நித்தம் ஒரு வானம்
நாயகன் அசோக் செல்வன் இப்படி தான் வாழ வேண்டும் என்று கொள்கை வகுத்துக் கொண்டு அதன்படி வாழ்ந்துவருபவன் அவனுக்கு திருமணம் நிச்சயமாகி திருமணம் ஆகும் நேரத்தில் தன் வருங்கால மனைவியுடன் எப்படி வாழ வேண்டும் என்று அறிவுரை கூறும் போது அந்த அறிவுரை ஏற்ற மணமகள் தன் காதலனை தேடி செல்கிறார்
திருமணம் நின்ற துக்கத்தில் அசோக் செல்வன் தனக்கு தெரிந்த டாக்டரிடம் சொல்ல
அவர் தான் எழுதியதாக இரண்டு கதைகளை கொடுக்கிறார் அதைப் படிக்கும் அசோக் செல்வன் அதன் கிளைமாக்ஸ் பக்கம் கிழிக்கப்பட்டிருப்பது தெரிந்து அது என்ன என்று டாக்டர் என்று கேட்க இது கதை அல்ல உண்மை முடிவு என்ன என்பதை தெரிந்து கொள்ள அவர்கள் நேரில் சந்தித்து தெரிந்து கொள் என்று சொல்ல
முடிவைத்தேடி அசோக் செல்வன்
முடிவை தெரிந்து கொண்டாரா
அது என்ன
என்பதை சுவாரசியமாக காத்திருக்கும் படம் தான் நித்தம் ஒரு வானம்
அசோக்செல்வன் சினிமா வரலாற்றில் நித்தம் ஒரு வானம் ஒரு மைல் கல்லாக இருக்கும் நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார் நாவலில் தன்னை நாயகன் ஆக்கிக் கொண்டு அவர் சொல்லும் டிராவல் நம்மளும் அவருடன் பயணிக்கிறோம்
மூன்று கதாபாத்திரங்களுமே முத்தாக சத்தாக மெருகேற்றி இருக்கிறார் எதிலும் சுத்தம் பார்க்கும் அசோக்செல்வன் கேரக்டரில் தினசரி பேப்பர் படிப்பதில் இருந்து ட்ராவல் கார் கதவை அவர் மூடும் பாணி அழகாக அருமையாக செய்திருக்கிறார்
நாயகிகள் மூன்று பேர்
அபர்ணா பாலமுரளி
ஸ்வாத்மிகா
ரித்து வர்மா
மூவரும் முப்பெரும் தேவிகள் அவர்கள் பணியை சிறப்பாக செவ்வனை செய்து அசோக் செல்வனுக்கு பலம் சேர்க்கிறார்கள்
பாடல்களை தவிர்த்து இருந்தால் படத்தின் வேகம் இன்னும் கூடி இருக்கும்
இயக்குனருக்கு இணையாய் பாராட்டப்பட வேண்டியவர் ஒளிப்பதிவாளர் விது ஐயன் ஐஸ்கட்டி சாரல்களின் குளுமையை நம்முள் வரவைத்து நம்மை அந்த இடத்துக்கு அழைத்துச் செல்கிறார்
அறிமுக இயக்குனர் என்றாலும் ஆரம்பமே அசத்தல்
>நித்தம் ஒரு வானம் – வாழ்க்கை<