spot_img
HomeNewsகிராமத்து அரசியலை மையமாக வைத்து உருவாகியுள்ள 'பாண்டிய வம்சம்'..

கிராமத்து அரசியலை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘பாண்டிய வம்சம்’..

கிராமத்து அரசியலை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘பாண்டிய வம்சம்’..!

ரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி சார்பாக இ.சிவபிரகாஷ் மற்றும் கேப்டன் எம் பி ஆனந்த் இணைந்து தயாரித்திருக்கும் ‘பாண்டிய வம்சம்’ திரைப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை பசும்பொன் முத்துராமலிங்க திருக்கோவிலில் அகில இந்திய பார்வேர்ட் பிளாக் கட்சியின் தேசிய துணை தலைவர் டாக்டர் . பி. வி. கதிரவன் Ex MLA வெளியிட்டார்.

பாண்டிய வம்சம் திரைப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கி நடித்துள்ளார் இ. சிவபிரகாஷ். இதில் நாயகியாக ரக்ஷிதா மற்றும் ஆலியா ஹயாத் நடித்துள்ளனர். முழு நீல வில்லனாக மனோஜ் குமார் நடித்துள்ளார், மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் விஜயகுமார், போஸ் வெங்கட் மற்றும் குட்டி புலி சரவணன் சக்தி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் கதையைப் பற்றி இயக்குனர் கூறுகையில், “இப்படம் கிராமத்தில் உள்ள அரசியலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. அரசியல் மட்டுமல்லாது இந்த சமுதாயத்துக்கு தேவையான சில முக்கிய விஷயங்களையும் பதிவு செய்துள்ளோம் என்றார்”.

இப்படத்திற்கு இசை ஸ்ரீகாந்த் தேவா, ஒளிப்பதிவு கண்ணதாசன் செழியன், படத்தொகுப்பு மாதவன்.

Must Read

spot_img