spot_img

வதந்தி விமர்சனம் எஸ் ஜே சூர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க புஷ்கர் காயத்ரி மற்றும் வால் வாட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து அமேசான் பிரைமில் வெளிவந்திருக்கும் வலைத்தொடர் வதந்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் மேன்சன் நடத்திவரும் லைலாவின் மகள் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி விடலை பருவத்தின் விளையாட்டுத்தனமாக இருக்க மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார் விசாரணை அதிகாரியாக எஸ் ஜே சூர்யா கொலைக்கான காரணத்தை அறிய முற்பட பல பல திடுக்கிடும் சம்பவங்களும் எதிர்பாராத அதிர்ச்சிகளும் அவருக்கு காத்திருக்கின்றன இறுதியில் கொலை காரனை அவர் எப்படி கண்டுபிடித்தார் என்பதே கதையின் முடிவு  எஸ் ஜே சூர்யாவின உதவியாளராக இருந்த ஆண்ட்ரூ லூயிஸ் வலைத்தொடரை எழுதி இயக்கி இருக்கிறார் கதையின் ஆரம்பம் ஒரு சூட்டிங் ஸ்பாட்டில் ஆரம்பித்து பல வதந்திகளுடன் வேறு வேறு கோணத்தில் திரைக்கதை நகர்வு விறுவிறுப்பாக வித்தியாசமாக சஸ்பென்சாக மக்கள் ரசிக்கும்படியாக அருமையாக நகர்த்தி சென்று இருக்கிறார் இயக்குனர் ரசிகனின் பார்வையில் குற்றவாளி இவனாக இருக்கலாமா இல்லை இவனாக இருக்கலாமா இல்லை அவனாக இருக்கலாமா என்று யூகிக்க முடியாத படி எடுத்துச் சென்று இருக்கிறார் நாசர் கதாபாத்திரம் மூலமாக அவரின் நாவல் மூலமாக நாயகி இப்படிப்பட்டவர் என்றும் கொலையாளி இவராக இருக்க கூடும் என்றும் என்ற பார்வையில் ஒரு புறம் மற்றொருபுறம் அரசியல்வாதி பத்திரிக்கை எடிட்டர் அவர் பார்வையில் ஒரு புறம் என சஸ்பென்சை விறுவிறுப்பு குறையாமல் எடுத்து செல்கிறார் நாயகி  துடுக்குத்தனம் விளையாட்டுத்தனம் மற்றவர் பார்வையில் எதற்கும் தயார் என்ற கோணம் என பல கோணங்களின் பரிமாணங்களை நமக்கு விருந்தளிக்கிறார் நாயகி சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி லைலா ஆங்கிலோ இந்தியன் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் உடல் மொழியும் வசன மொழியும் அவருக்கு ஈடு கொடுக்கிறது இரண்டு மூன்று கதாபாத்திரங்களை தவிர மற்ற அனைவரும் கன்னியாகுமாரி வட்டார மொழி தான் அதிலும் சப் இன்ஸ்பெக்டராக வரும் விவேக் பிரசன்னா கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள் அவரின் போண்டா டி நகைச்சுவை அருமை படபடப்பாக பேசும் எஸ்.ஜே. சூர்யாவை இந்த மலைத் தொடரில் பொறுமையாக நிதானமாக விவேகமான   கணவனாக கடமை தவறாத காவலனாக கண்ணியமிக்க மனிதனாக நம்மை கொள்கிறார் நிஜம் எது நிழல் எது என அவர் தவிக்கும் தவிப்பு அவருக்கே உரித்தான ஸ்டைல் தொடரில் ஆங்காங்கே லாஜிக் மீறல் ஒன்று ரத்தக்கரை உள்ள துணியை பீரோவில் மறைத்து வைப்பது ஏன் நாயகி எழுதிய கடிதத்தை லைலா பத்திரமாக வைத்திருப்பது ஏன் வீட்டை விட்டு சென்ற நாயகி எங்கே தங்கி இருந்தார் இதுபோல இன்னும் பல ஆனால் தொடரின் விறுவிறுப்பு மூலம்  லாஜிக்கை நம்மை மறக்கடிக்க செய்திருக்கிறார் இயக்குனர் ஒளிப்பதிவு சரவணன் அவருக்கு பிடித்த நிறம் பச்சை அனைத்து காட்சிகளிலும் ஏதாவது ஒரு இடத்தில் பச்சை நிறம் தெரியும்படி மிக அருமையாக குளுமையாக ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் சைமன் கே கிங் இன் இசை படத்திற்கு பக்க பலம் தயாரிப்பாளர் புஷ்கர் காயத்ரிக்கு சுழல் வெற்றிக்கு பிறகு வதந்தி மற்றும் ஒரு வெற்றி வதந்தி சஸ்பென்ஸ் ரசிகர்களுக்கு ஒரு 

Must Read

spot_img