உதயநிதி ஸ்டாலின் ஆத்மிகா பிரசன்னா ஸ்ரீகாந்த் வசுந்தரா  பூமிகா மற்றும் பலர் நடிக்க மூ மாறன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும்  படம் கண்ணை நம்பாதே 

 கதைக்களம் உதயநிதி வாடகை வீட்டில் இருக்கும் ஹவுஸ் ஓனரின் மகள் ஆத்மிகாவே காதலிக்க இது தெரிந்த அவரது தந்தை வீட்டை காலி செய்ய சொல்ல ஒரே நாளில் வீடு தேடி பிரசன்னா வசிக்கும் வீட்டில் ரூம் மேட்டாக குடி போகிறார் இந்நிலையில் பூமிகா மன அழுத்தத்தில் காரை ஓட்ட முடியாமல் தவிக்க அவருக்கு உதவி செய்யும் உதயநிதி ஸ்டாலின் அவரை வீட்டில் இறக்கிவிட்டு மழையின் காரணத்தால் பூமிகா தன் காரை எடுத்துக் கொண்டு செல் என்று கூறுகிறார் இந்த விஷயத்தை தன் ரூம் மேட் பிரசன்னாவிடம் சொல்ல தனியாக இருக்கும் பூமிகாவை தேடி அதே காரில் உதயநிதிக்கு தெரியாமல் செல்லும் பிரசன்னா பூமிகாவை மான பங்கப்படுத்தும் முயற்சிக்க அதில் பூமிகா மரணம் அடைகிறார்
 பூமிகாவின் பிணத்தை அதே காரில் வைத்து எதுவும் தெரியாதது போல் தன் ரூமுக்கு வந்துவிட காலையில் காரை பூமிகாவிடம் ஒப்படைக்க உதயநிதி புறப்படும்போது காரின் டிக்கியில் பூமிகாவின் சடலத்தை பார்த்து அதிர்ச்சியில் பிரசன்னாவிடம் சொல்ல பிரசன்னா போலீஸிடம் சென்றால் நாம் மாட்டிக் கொள்வோம் அதனால் சடலத்தை நாமே எங்கேயாவது போட்டு விடலாம் என்று சொல்ல அரை மனதோடு அதற்கு சரி என்ற தலை ஆட்டும் உதயநிதி சடலத்தை டிஸ்போஸ் செய்யும் போது பல பிரச்சினைகளை சந்திக்கிறார் இறுதியில் நடந்தது என்ன என பல சுவாரஸ்ய திருப்பங்களுடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர் முமாறன்
 நான்கு வருட படபிடிப்புக்கு பின் வெளிவந்திருக்கிறது கண்ணை நம்பாதே படத்தின் ஆரம்பக் காட்சி ஒரு காதல் படமாக ஆரம்பிக்க போக போகப் போக சஸ்பென்ஸ் திரில்லர் மர்டர் என இயக்குனர் வேறு பாதையில் பயணிக்க ஆரம்பித்து விடுகிறார் இந்த காலம் கிரைம் திரில்லர் காலம் போல் பல படங்கள் இது போன்ற கதைகளத்தில் வந்து கொண்டிருக்கின்றன உதயநிதி தமிழக அமைச்சராக பொறுப்பேற்றதற்கு பிறகு வந்திருக்கும் முதல் படம் அடுத்த படம் படம் உதயநிதியின் திரையுலக வாழ்க்கையில் நிறைவு செய்யும் படமாக இருப்பதால் கண்ணை நம்பாதே படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகம் அதை பூர்த்தி செய்து இருக்கிறார் உதயநிதி டிக்கியில் சடலத்தை வைத்துக்கொண்டு அவர் தவிக்கும் தவிப்பு படம் பார்க்கும் நம்மையும் தவிக்க வைக்கிறார் காதலிக்கும் போது காதல் நாயகனாக வருகிறார் ஆத்மிகா காட்சிகள் குறைவாக இருந்தால் நிறைவாக செய்திருக்கிறார் அதிகமாக அவர் பேசியது செல்போனில் தான் பிரசன்னா கொலையும் செய்துவிட்டு அதில் உதயநிதியை மாட்டிவிட்டு அவருக்கு உதவுவது போல் உதவியும் செய்து ஒரு குள்ளன் நரித்தனமான நடிப்பு  பிரசன்னா பிரசன்னா தான்
 ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு பூமிகாவுக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் தமிழ் திரையில் மீண்டும் ஒரு வளம் வருவார்  ஒரு பரிதாபத்துக்குரிய முகம் அதற்குள் ஒளிந்திருக்கும் ரகசியம் இயக்குனருக்கு மட்டுமே தெரியும் படம் பார்க்கும் நமக்கும் பல ரகசியங்கள் பல உண்மைகள் இறுதிக் காட்சியில் இயக்குனர் நம்மை அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அடைய வைக்கிறார் பல திருப்பங்களுடன் படத்தை பரபரப்பாக கொண்டு செல்லும் இயக்குனர் இறுதிக்காட்சியில் இன்ஸ்பெக்டராக வரும் மாரிமுத்து குற்றவாளியை சுடும் காட்சி சிறுவர்கள் விளையாடும் திருடன் போலீஸ் போல் உள்ளது அதற்கு மாரிமுத்துவை குறை சொல்வதா அல்லது அவர் அணிந்திருக்கும் இன்ஸ்பெக்டர் ஆடையை சொல்வதா என்று தெரியவில்லை கண்ணை நம்பாதே _ஒரு க்ரைம் நாவல்

Must Read

spot_img