spot_img
HomeNewsதீர்க்கதரிசி விமர்சனம்

தீர்க்கதரிசி விமர்சனம்

சத்யராஜ் ஒய் ஜி மகேந்திரன் அஜ்மல் துஷ்யந்த் ஸ்ரீமன் தேவதர்ஷினி பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் பலர் நடிக்க வந்திருக்கும் படம் தீர்க்கதரிசி

கதை களம் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு வினோதமான ஃபோன் கால் வருகிறது நடக்க இருப்பதை முன்கூட்டியே தகவல் தெரிவிக்கும் நபர் நடக்கப் போகும் விஷயத்தை சொல்ல அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அலட்சியமாக இருக்கும் காவல் கட்டுப்பட்டு அறைக்கு தலைவராக இருப்பவர் ஸ்ரீமன்

இந்நிலையில் அந்த மர்ம நபர் கூறிய விஷயம் நடந்து விட அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் இருக்கும்போது மற்றும் ஒரு போன் கால் வருகிறது அந்த போன் காலிலும் நடக்கப் போகும் விஷயத்தை சொல்லும் அந்த நபர் நடக்கும் விஷயத்தை தடுக்குமாறு சொல்ல போலீசார் பல முயற்சிகள் செய்தும் அந்த நபர் சொன்னது நடந்து விடுகிறது

அந்த நபர் நடக்கும் என்று சொன்ன விஷயங்கள் என்ன யார் அந்த நபர் முன்கூட்டியே நடக்கும் விஷயம் அவருக்கு எப்படி தருகிறது அவர் என்ன கடவுளின் குழந்தையா அல்லது முற்றும் துறந்த துறவியா இல்லை கடவுள் அருள் பெற்று தீர்க்கதரிசியா என்பதைப் பற்றி தெரிந்துகொள்ள நீங்கள் பார்க்க வேண்டிய படம்

தீர்க்கதரிசி படம் ஆரம்பிக்கும் போது ஏதோ ஒரு ஆன்மீக படமாக இருப்பது போல் கோயில் காட்டி அங்கு மக்களை பாகுபாடில்லாமல் வாழ கடவுளை வேண்டும் நபரைப் பார்த்து படம் ஆன்மீகத்தில் சொல்லப் போகிறது என்று நாம் நினைக்கும் நேரத்தில் வேறு ஒரு கோணத்தில் திரைக்கதையை நகர்த்தி நம்மை வேறொரு பாதைக்கு அழைத்துச் செல்கிறார் இயக்குனர்

திரைக்கதையை ஒரு பரபரப்புடன் படம் பார்க்கும் நம்மை ஒரு பதபதைப்புடன் வைத்துக்கொண்டு இயக்கி இருக்கிறார் இயக்குனர் அறிமுகமாக இயக்குனர் என்றாலும் முதிர்ச்சியான அனுபவம் தெரிகிறது
நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் திலகம் சிவாஜியின் பேரன் ராம்குமார் மகன் துஷ்யந்த் நடித்திருக்கிறார் ஆனால் அவர் கதை நாயகனா அல்லது துணை நாயகனா என்பது நமக்கு தெரியவில்லை

அஜ்மல் இவரின் அறிமுகமே அசத்தலாக இருக்கிறது ஆனால் படத்தின் கிளைமாக்ஸ் சீன் இவர் கண்டுபிடிக்கும் உண்மைக்கும் அறிமுகத்துக்கும் சம்பந்தமே இல்லை

அதேபோல் நியூஸ் ரீடர் சந்தியா நடிக்கும் காட்சி நம்மை ஏமாற்றும் காட்சியாக இருந்தாலும் கதாபாத்திரமும் கதாபாத்திரத்தின் தன்மையும் ஒரு ஏமாற்றமே

ஒய் ஜி மகேந்திரன் ஒரு மனோ தத்துவ மருத்துவராக சிறப்பாக செய்திருக்கிறார் முக பாவங்களும் கண்களும் ஒரு மன தத்துவ மருத்துவரை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் தற்காலிக அரசியலை வசனத்தில் சூசமாக வெளிப்படுத்துவது அவருக்கே உரிய பாணி காட்சி குறைவு என்றாலும் நிறைவாக செய்திருக்கிறார்

ஸ்ரீமன் தேவதர்ஷினி இருவரும் கணவன் மனைவியாக தங்கள் பங்களிப்பை அழகாக வெளிப்படுத்திருக்கின்றனர்

சத்யராஜ் இவரைப் பற்றி நாம் சொல்வதை விட படம் பார்க்கும் நீங்கள் தெரிந்து கொள்வதே நல்லது

காவல்துறை அதிகாரியாக இருக்கும் அஜ்மல் தலையில் தொப்பியுடன் இருக்கும் போது அவர் கீழ் வேலை செய்பவர்கள் தொப்பி இல்லாமல் இருப்பது உயிர் அதிகாரியை அவமதிப்பது போல் இருக்கிறது

அதேபோல் ஆழ்துளை கிணற்றில் விழுந்திருக்கும் குழந்தையைப் பற்றி செய்தி வரும்போது குரலில் மூன்று வயதென்றும் வார்த்தையில் நான்கு வயது என்றும் வருகிறது இது சிறிய விஷயம் என்றாலும் கவனக்குறைவு என்பது சிறியது பெரியது என்பது இல்லை கவனித்திருக்க வேண்டும்

தீர்க்கதரிசி — ரசிகர்களுக்கு சிறந்த தரிசனம்

Must Read

spot_img