spot_img
HomeNewsவிரு பாக்ஷா விமர்சனம்

விரு பாக்ஷா விமர்சனம்

தெலுங்கு படங்கள் வெற்றியை தொடர்ந்து தமிழில் வெளிவருவது வாடிக்கை அந்த வரிசையில் வெளி வந்திருக்கும் படம் விரு பாக்ஷா

கதைக்களம் 30 வருட 35 வருடங்களுக்கு முன்பாக இருக்கிறது சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் கிராமத்து மக்கள் மத்தியில் கிராமத்து கோயிலில் கர்ப்ப கிரகத்தில் ஒருவன் மரணம் அடைந்து விட சாமி குத்தம் ஆகிவிட்டது என பரிகாரமாக குறிப்பிட்ட நாட்கள் வரை ஊரை விட்டு யாரும் செல்லக்கூடாது வரவும் கூடாது என ஊர் கோவில் பூசாரி உத்தரவை மீறி காதலனுக்காக ஊரைத் தாண்டுகிறாள் ஒரு பெண் அந்தப் பெண்ணின் காதலன் ரயிலில் அடிபட்டு சாக ஊருக்கு திரும்பும் அந்தப் பெண் குளவிக் கூட்டில் முகம் வைத்து தற்கொலை செய்து கொள்ள

அதைப் பார்த்தவன் மறுநாள் தற்கொலை செய்துகொள்ள

அதைப் பார்த்த பெண் அவளும் தற்கொலை செய்து கொள்ள
தற்கொலையை பார்த்த நாயகி தற்கொலை செய்ய முயற்சி எடுக்கும் நேரத்தில் நாயகன் காப்பாற்றி விடுகிறான் ஆனாலும் அவள் தற்கொலை முயற்சியில் இருந்து மீள முடியாது என பூசாரி அவரை உயிரோடு பூமியில் புதைத்தால்தான் ஊர்மக்கள் உயிர் பிழைக்க முடியும் என்று சொல்ல

நாயகியை காப்பாற்ற நாயகன் ஊர் மக்களை நான் காப்பாற்றுகிறேன் நாயகியை ஒன்றும் செய்ய வேண்டும் என்று கூற அதற்கு 8 மணி நேரத்திற்கு வரும் சூரிய கிரகணத்துக்கு நடந்து விட வேண்டும் என்று பூசாரி சொல்ல இல்லை என்றால் நாயகி புதைப்பது உறுதி என்பதை அறிந்த நாயகன் 8 மணி நேரத்தில் அவன் கண்டுபிடித்தது என்ன

நடந்தது என்ன
நாயகி உயிர்பிழைத்தாளா
என்பதே மீதி கதை

படம் தொடங்கி முடியும் வரை சீட் நுனியில் உட்கார வைத்து விடுகிறார். பல ட்விஸ்ட்களை வைத்து அனைத்தையும் ஒரு புள்ளியில் இணைக்கிறார் டைரக்டர். சமஹத் சாய்நூதின் ஒளிப்பதிவு இன்னோரு ஹீரோ என்று சொல்லலாம்.

. காதல், கோபம், இயலாமை என்று கலந்த நடிப்பை தந்துள்ளார் சம்யுக் கத்தா. ஹீரோ சாய் தரம் தேஜ் சரியான தேர்வு. ஊர் தலைவர், பூசாரி, அகோரி என படத்தில் நடித்த அனைவருமே சிறந்த நடிப்பை தந்துள்ளார்கள்.அனைத்து மொழி மக்களுக்கும் பிடித்த படத்தை தர ஆரம்பித்து விட்டார்கள்

விரூபாக்ஷா -அழகான அமா னுஷ்யம் ஆன்மீகம் விஞ்ஞானம் ஆவிகள் என அனைத்தையும் கடந்து ஒரு திகிலுடன் திரைக்கதை அமைத்து நம்மை ஒரு பயத்துடன் படம் பார்க்கும் அளவுக்கு சிறப்பாக இயக்கியிருக்கிறார்

Must Read

spot_img