spot_img
HomeNewsசைக்கலாஜிக்கல் திரில்லர் படத்திற்கு 'ஒயிட் ரோஸ்' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது!

சைக்கலாஜிக்கல் திரில்லர் படத்திற்கு ‘ஒயிட் ரோஸ்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது!

தயாரிப்பாளர் ரஞ்சனி வழங்கும், அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில், கயல் ஆனந்தி-ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் சீட் நுனியில் அமர வைக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் படத்திற்கு ‘ஒயிட் ரோஸ்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது!

நடிகை ‘கயல்’ புகழ் ஆனந்தி பல திரைப்படங்களில் தனது திறமையான நடிப்புடன், எளிமையான, இயல்பான, பக்கத்து வீட்டுப் பெண் கதாபாத்திரம் மூலம் ரசிகர்களின் மில்லியன் கணக்கான இதயங்களைக் கவர்ந்துள்ளார். சரியான கதைத் தேர்வு மற்றும் கதாபாத்திரங்களின் மூலம், அவர் தனது சினிமா பயணத்தில் சரியான கிராஃபில் வளர்ந்து வருகிறார். இப்போது இயக்குநர் சுசி கணேசனின் முன்னாள் அசோசியேட்டாக இருந்தவரும் இந்தப் படம் மூலம் அறிமுக இயக்குநராகும் ராஜசேகர் இயக்கத்தில் சைக்கலாஜிக்கல் திரில்லர் கதையான ‘ஒயிட் ரோஸ்’ படத்தில் ஆனந்தி கதாநாயகியாக நடிக்கிறார்.

படத்தின் மையக்கதை பற்றி இயக்குநர் ராஜசேகர் கூறும்போது, “ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மிருகம் நிச்சயம் இருக்கும். அது நம்மைச் சுற்றியுள்ள மிருகங்களை விட ஆபத்தானது என்று பலர் கூறுவதை நாம் கேள்விப்படுகிறோம். ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சாதாரணப் பெண், இப்படிப்பட்ட ஒரு மிருகத்திடம் மாட்டி எப்படி பிரச்சனைகளை எதிர்கொள்கிறார் என்று இறுதி வரை பல திருப்பங்களுடன் கூடிய சைக்கலாஜிக்கல் திரில்லராக இந்தப்படம் இருக்கும்.

படத்தின் முன்னணி கதாபாத்திரங்களைப் பற்றி மேலும் அவர் கூறுகையில், “கயல் ஆனந்தி பல படங்களில் தனது அழகான நடிப்பால் நம்மைக் கவர்ந்துள்ளார். ஆனால், இது அவரது சினிமா பயணத்தில் நிச்சயம் ஒரு சிறந்த படமாக இருக்கும். . ஆர்.கே.சுரேஷ் வில்லனாக நடிக்கிறார். அவர் தனது அற்புதமான நடிப்பால் பார்வையாளர்களை நடுங்க வைப்பார் என்று நான் உறுதியாக சொல்வேன். இதில் பார்வையாளர்கள் அவரின் வேறு வெர்ஷனைப் பார்ப்பார்கள்
இன்னும் பல முக்கிய நடிகர்களை நாங்கள் இறுதி செய்து வருகிறோம். விரைவில் அது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிடுவோம்” என்றார்.

தொழில்நுட்பக்குழு விவரம்:

எழுத்து, இயக்கம்: ராஜசேகர்,
தயாரிப்பு: ரஞ்சனி,
இசை: ஜோஹன் ஷெவனேஷ்,
ஒளிப்பதிவு: இளையராஜா வி,
படத்தொகுப்பு: கோபிகிருஷ்ணா,
பாடல்கள்: கவிப்பேரரசு வைரமுத்து,
கலை: டி.என். கபிலன், ஸ்டண்ட்ஸ்: ‘பீனிக்ஸ்’ பிரபு & ‘ராம்போ’ விமல்,
நடனம்: லீலாவதி,
ஆடை வடிவமைப்பு: ஏ. சுபிகா,
ஒலி வடிவமைப்பு & ஒலிக்கலவை: லக்ஷ்மி நாராயணன் ஏ.எஸ்.,
VFX: Hocus Pocus,
படங்கள்: எஸ் மோகன்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா-ரேகா D’One,
பப்ளிசிட்டி டிசைன்: Zoe Studios,
நிர்வாக மேலாளர்: பி தண்டபாணி,
லைன் புரொடியூசர்: சேதுராமன்

Must Read

spot_img