ஜஸ்டின் விஜய், வித்யா பிரதீப், ராபர்ட் மாஸ்டர், கஸ்தூரி சங்கர், அபிநயா மற்றும் பலர். நடிப்பில் எஸ்.ஏ பிரபு இயக்கத்தில் வந்திருக்கும் படம்
.
நாயகன் ஜஸ்டின் விஜய் பொறியியல் படித்துவிட்டு அமானுஷ்யங்கள் மீதான ஆர்வத்தின் காரணமாக ஆவிகளுடன் பேசுவதில் தீவிரம் காட்டுகிறார். இதற்காக சென்னையில் உள்ள பிரத்யேக பயிற்சி பள்ளி ஒன்றில் பயிற்சியும் பெறுகிறார். இவருக்கு சென்னையின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அமானுஷ்யம் தொடர்பான தொல்லை இருப்பதாக அந்த வீட்டின் உரிமையாளர் மின்னஞ்சல் மூலம் இவரிடம் தெரிவிக்க.. அந்த வீட்டில் உள்ள அமானுஷ்யம் என்ன? என்பதனை தெரிந்து கொள்வதற்காகவும், அங்கு உலவிக் கொண்டிருக்கும் ஆவியுடன் பேசுவதற்காகவும் முயற்சி செய்கிறார். அந்த முயற்சியில் அவருக்கு வெற்றி கிடைத்ததா? இல்லையா? என்பதே இப்படத்தின் கதை.
படத்தின் தொடக்கத்தில் அஷ்டமா சித்திகள் குறித்தும்.. குவாண்டம் அறிவியல் குறித்தும் ..விவரிப்பதும் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது. பாரா சைக்காலஜி என்ற விடயம் குறித்து விளக்கமும் அளிக்கிறார்கள். அதன் பிறகு படம் வேறு திசையில் பயணித்து, வழக்கமான கதை ஓட்டத்தில் தொடர்கிறது.
ஆவிகளுடன் பேசுவதற்காக பிரத்யேக கருவிகளுடன் நாயகன் பேச தொடங்கும் போது.. ஆவி அவனை எச்சரிக்கிறது. பிறகு அவன் ஏன் எச்சரித்தது என்பதற்கான காரணம் தெரிந்த பிறகு நாயகன் அமைதியாகி விடுகிறான். அதன் பின் என்ன முடிவு ஏற்படுகிறது என்பதுதான் சுவாரசியமானது.
மிஸ்ட்ரி திரில்லர் + ஹாரர் திரில்லருடன் பயணித்தாலும் படத்தின் ஒளிப்பதிவு பின்னணி இசையும் ரசிகர்களுக்கு ஆறுதலாக இருக்கிறது.
புதுமுக நாயகன் ஜஸ்டின் விஜய் பல இடங்களில் நடிக்க முயற்சிக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் வித்யா பிரதீப் தன் அனுபவமான நடிப்பால் மிளிர்கிறார். டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டும் தன் பங்கிற்கு நன்றாக நடித்திருக்கிறார். இணையதள சர்ச்சை நடிகையான கஸ்தூரியும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
ர்.