spot_img
HomeNewsரெட் சாண்டல்வுட் - விமர்சனம்

ரெட் சாண்டல்வுட் – விமர்சனம்

வெற்றி, தியா, எம். எஸ். பாஸ்கர், கணேஷ் வெங்கட்ராமன், ‘கேஜிஎஃப்’ ராம், மாரிமுத்து, கபாலி விஸ்வந்த், ‘மெட்ராஸ்’ வினோத், வினோத் சாகர், அபி நட்சத்திரா மற்றும் பலர். நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ரெட் சாண்டல்வுட்

சென்னை வியாசர் பாடியில் குத்துச்சண்டை வீரராக பயிற்சி பெறும் கதையின் நாயகனான பிரபாகரன் ( வெற்றி) தன்னுடைய நண்பனான கருணாவை ( கபாலி விஸ்வந்த்) தேடி ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு செல்கிறார். செல்லும் முன் இந்தியாவின் ஒரு மாநிலத்தில் இருந்து அடுத்த மாநிலத்திற்கு செல்லும் முன் காவல் நிலையத்தில் பதிவு செய்து கொள்ளும் நடைமுறையை மறக்காமல் கடைப்பிடிக்கிறார். திருப்பதிக்குச் சென்று தனது நண்பனை தேடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் போது, காவல்துறை இவரை செம்மரம் கடத்தியதாக போலியாக குற்றம் சாட்டி,  என்கவுண்டரில் சுட்டு தள்ள முயற்சிக்கிறது. அந்த முயற்சியிலிருந்து தப்பிக்கும் பிரபாகரன்.. செம்மர கடத்தல் பின்னணியில் இருப்பது யார்? என்பதை கண்டறிந்து அவர்களை என்ன செய்கிறார் என்பதும், தனது நண்பரை உயிருடன் மீட்டாரா? இல்லையா? என்பதும் தான் இப்படத்தின் திரைக்கதை.
பிரபாகரன் கதாபாத்திரத்தில் நடிகர் வெற்றி தனக்கான பங்களிப்பை நேர்த்தியாக வழங்கி இருக்கிறார். அரிமாறனாக நடித்திருக்கும் கே ஜி எஃப் பட நடிகர் ராம் மிரட்டலான வில்லன் வேடத்தில் கச்சிதமாக பொருந்துகிறார். அந்தக் காலகட்டத்தில் தமிழக அரசுக்கும், ஆந்திர அரசுக்கும் இடையே சிக்கலை ஏற்படுத்திய இந்த செம்மர கடத்தல் என்கவுண்டர் வழக்கினைப் பற்றிய அசலான பின்னணியை சற்றே சமரசத்துடன்… ஆனால் விறுவிறுப்பான எக்சன் திரில்லருடன் விவரித்திருக்கிறார் இயக்குநர் குரு ராமானுஜம்.
முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் திரைக்கதை விறுவிறுப்பாக செல்கிறது. அப்பாவி தமிழர்களின் குடும்பப் பின்னணி குறிப்பாக எம். எஸ். பாஸ்கரின் வாழ்வியல் பின்னணி ரசிகர்களை மனதை பிசைகிறது.2015 ஆம் ஆண்டில் ஆந்திராவின் திருப்பதி வனப்பகுதியில் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட 20 தமிழர்களின் உண்மை சம்பவத்தின் பின்னணியில் செம்மர கடத்தலை பற்றிய திரைப்படமாக வெளியாகி இருக்கிறது ரெட் சாண்டல் வுட். .

ஒளிப்பதிவு, பின்னணி இசை, படத்தொகுப்பு ஆகியவை ஒன்றிணைந்து ரசிகர்களுக்கு சிறப்பான படைப்பை வழங்கி இருக்கிறது.
ரெட் சாண்டல் வுட் – உண்மை

Must Read

spot_img