spot_img
HomeNewsதமிழ் குடிமகன் விமர்சனம்

தமிழ் குடிமகன் விமர்சனம்

சேரன் பிரியங்கா வேலா ராமமூர்த்தி எஸ் ஏ சந்திரசேகர் சுரேஷ் காமாட்சி மற்றும் பலர் நடிக்க இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி வெளிவரவிற்கும் படம் தமிழ் குடிமகன் கதைக்களம் தமிழ் சினிமாவின் பல்லண்டு காலம் சொல்லப்பட்ட ஜாதி பிரச்சனை தான் படத்தின்  கரு படத்தின் ஆரம்பம் இறந்த உடலுக்கு சாங்கியம்  தொழில் செய்யும் சேரன் அந்த ஊரில் தாழ்த்தப்பட்ட குடிமகனாக பாதிக்கப்படுகிறார் படித்திருக்கிறார் பால் வியாபாரம் செய்கிறார் தங்கை டாக்டருக்கு படிக்கிறார் இருந்தாலும் ஜாதி எனும் நச்சு அவரை நசுக்கிக்கிறது அவரது தங்கை உயர்த்த ஜாதி சேர்ந்த ஊர் பெரிய மனிதனின் மகனை காதலிக்க இதை அறிந்த அந்த பெரிய மனிதன் சேரனின் தங்கையை ஊரின் நடுவில் அடித்து உதைக்க படுகிறார் சேரன் அவர்களை ஒன்றும் செய்ய முடியாமல் தவிக்க காலத்தின் கட்டாயத்தினால் ஊர் பெரிய  மனிதனின் தந்தை மரணம் அடைய செய்ய சேரணை அழைக்க சாங்கியம் செய்ய முடியாது என்று மறுக்க பிரச்சனை காவல் நிலையம் சென்று பெரியவரின் பூத உடல் அரசின் பிணவறைக்கு சென்று பிரச்சனை கோர்ட்டுக்கு செல்கிறது நீதிமன்றம் சேரன் பிரச்சனைக்கு மட்டும் ஒன்றி ஒட்டு மொத்தமாக சாதி பாகுபாட்டினால் சிக்கி தவிக்கும் மக்களின் நிலை மாறுவதற்கான தீர்வு ஒன்றை கொடுக்கிறது, அது தான் ‘தமிழ்க்குடிமகன்’.

நாயகனாக நடித்திருக்கும் சேரனின் பாவப்பட்ட முகம் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பதோடு, அவருடைய பக்குவப்பட்ட நடிப்பு கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. சேரனின் மனைவியாக நடித்திருக்கும் ஸ்ரீபிரியங்கா, தங்கையாக நடித்திருக்கும் தீபிக்‌ஷா, வேல ராமமூர்த்தி, அருள்தாஸ், எஸ்.ஏ.சந்திரசேகர், ரவி மரியா, துருவா, சுரேஷ் காமாட்சி, மு.ராமசாமி, மயில்சாமி என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவின் கேமரா காட்சிகளை மட்டும் இன்றி மனித உணர்வுகளையும் பார்வையாளர்களிடம் கடத்தியிருக்கிறது.சாம் சிஎஸ் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதையோடு பயணித்திருக்கிறது.பட்டியலின சமூகத்தினருக்கு ஆதரவான படம் என்று சொல்வதை விட அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும், வலிகளையும் சொல்லும் விதமாக படத்தின் திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்து இயக்கியிருக்கும் இயக்குநர் இசக்கி கார்வண்ணன், இந்த நிலை மாற வேண்டுமானால் ஒட்டு மொத்தமாக சாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறார். அது எப்படி முடியும்? என்ற கேள்விக்கும் அவர் விடை சொல்வதோடு, இதை அரசு நினைத்தால் மட்டுமே செய்ய முடியும் என்று அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

இந்த கருத்தை ஏற்கனவே பலர் பலவிதத்தில் சொல்லியிருந்தாலும், இதில் ஆண்ட பரம்பரை, பட்டியலின மக்களுக்கு நிலம் கொடுத்தது, சோரு போட்டது போன்ற விஷயங்களை பற்றி இயக்குநர் இசக்கி கார்வண்ணன் பேசியிருப்பதோடு,

”நான் பெரியவனா?, நீ பெரியவனா? என்ற போட்டி அல்லது சாதி அரசியல் கட்சிகளை பற்றி பேசுவது என்று தேவையில்லாத சர்ச்சைகளை தவிர்த்திருக்கும் இயக்குநர் இசக்கி கார்வண்ணன், சாதியை காரணம் காட்டியோ அல்லது ஒருவர் செய்யும் தொழிலை காரணம் காட்டியோ அவரை இழிவாகப் பார்க்க கூடாது, அப்படிப்பட்ட நிலை தற்போதும் ஏதாவது ஒரு இடத்தில் நடக்கிறது, அந்த நிலை மாற வேண்டும், என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

Must Read

spot_img