spot_img
HomeNews‘புஷ்பா புஷ்பா’ ; அல்லு அர்ஜுன் பாடல் கொடுத்த அதிர்ச்சி

‘புஷ்பா புஷ்பா’ ; அல்லு அர்ஜுன் பாடல் கொடுத்த அதிர்ச்சி

தெலுங்கு நடிகர்கள் பலரும் தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை பெற்று வருகின்றனர். குறிப்பாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் வெளியான புஷ்பா படத்தின் மூலம் தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய அளவில் மிகப்பெரிய ரசிகர்களை பெற்றவர் நடிகர் அல்லு அர்ஜுன். இந்தியிலும் கூட இவருக்கு ரசிகர்கள் உருவாகியுள்ளனர். இந்த நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இதன் முன்னோட்டமாக தற்போது இந்த படத்தில் இருந்து புஷ்பா புஷ்பா என்கிற பாடல் வெளியிடப்பட்டது. ஆனால் அதிர்ச்சி அளிக்கும் விதமாக இந்த பாடல் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற தவறியுள்ளது. அதிலும் குறிப்பாக தமிழ், மலையாள ரசிகர்கள் இரண்டு மில்லியனுக்கும் குறைவாகவே இந்த பாடலை பார்த்து ரசித்துள்ளனர்.

தெலுங்கில் 21 மில்லியன் பேர் ரசித்துள்னர். அதைவிட ஆச்சரியமாக போஜ்புரி மொழியில் கூட இரண்டு மில்லியனுக்கு அதிகமாக இந்த பாடலை பார்த்து ரசித்துள்ளனர். ஏற்கனவே முதல் பாகத்து பாடல்கள் தாறுமாறாக ஹிட் அடித்த நிலையில் இப்படி இரண்டாம் பாகத்தில் இருந்து வெளியாகி இருக்கும் முதல் பாடமே சொதப்பலாக இருப்பதால் படக்குழுவினர் அடுத்தடுத்த பாடல்களின் கவனம் செலுத்த இருக்கிறார்களாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img