spot_img
HomeNewsஅசலை விட வட்டிக்குத்தான் கிக்கு அதிகம் ; தயாரிப்பாளரை கலாய்த்த சந்தானம்

அசலை விட வட்டிக்குத்தான் கிக்கு அதிகம் ; தயாரிப்பாளரை கலாய்த்த சந்தானம்

நடிகர் சந்தானம் நடிப்பில் இங்க நான் தான் கிங்கு என்கிற படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை பிரபல தயாரிப்பாளரும் பைனான்சியருமானஅன்புச் செழியன் தயாரித்துள்ளார். இந்த நிலையில் இந்த படத்தில் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

சந்தானத்தை பொருத்தவரை எப்போது மேடையில் பேசினாலும் கலகலப்பாக பேசக்கூடியவர். அதிலும் தன்னை சுற்றி இருப்பவர்களை வைத்து கொஞ்சம் நக்கலும் நையாண்டியும் கலந்து பேசி அவர்களையே சிரிக்க வைத்து விடுவார். அப்படிப்பட்டவர் முரட்டு தயாரிப்பாளரான அன்புச் செழியனையே சிரிக்க வைக்கும் விதமாக நேற்று பேசினார்.

இந்த நிகழ்வில் அவர் பேசும்போது, “ஒருவருக்கு மகன், மகள் பிறக்கும்போது ஏற்படும் சந்தோஷத்தை விட பேரன், பேத்தி பிறக்கும்போது அதிக சந்தோசம் ஏற்படுகிறது ஏன் என அன்பு செழியனிடம் கேட்டேன். அதற்கு பதில் சொன்ன அவர், எப்போதுமே அசலை விட வட்டிக்கு தான் கிக்கு அதிகம் என்றார். இந்த மாதிரி பேசுவதில் அவர் வல்லவர். இது மாதிரி அவருடன் நிறைய பேசிக்கொண்டே இருப்பேன் என்று கூறினார்.

அன்புச் செழியன் ஒரு பைனான்சியர் என்பதால் அவரது பாணியிலேயே பதில் கூறியிருக்கிறார் என்று தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img