spot_img
HomeNewsவராது.. ஆனா வரும்.. சூர்யா கொடுத்த அப்டேட்

வராது.. ஆனா வரும்.. சூர்யா கொடுத்த அப்டேட்

சூர்யா நடிக்கும் படங்களின் அறிவிப்புகள் அவ்வப்போது வெளியாகிக் கொண்டே இருக்கும். அதிகாரப்பூர்வமாக இல்லாவிட்டாலும் சில நேரங்களில் சூசகமாக அறிவிக்கப்படுவது உண்டு. அந்தவகையில் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு ஆகிய படங்களில் சூர்யா நடிக்க இருக்கிறார் என்பது அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதே சமயம் சமீப காலமாக சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்கிற படத்தில் நடித்து வந்தார் சூர்யா. இதைத் தொடர்ந்து வெற்றி மாறன் அல்லது சுதா கொங்கரா டைரக்சனில் படம் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் யாரும் எதிர்பாராத வகையில் கார்த்திக் சுப்புராஜ் டைரக்ஷனில் படம் நடிக்க துவங்கி விட்டார்.

அப்படியானால் வாடிவாசல் புறநானூறு ஆகிய படங்கள் கைவிடப்பட்டதா என்று சமீபத்தில் சூர்யாவிடம் கேட்கப்பட்டது. படம் கைவிடப்படவில்லை.. ஆனால் தற்போதைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.. நிச்சயமாக இந்த இரண்டு படங்களிலும் நான் நடிப்பேன் என்று கூறியுள்ளார்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img