spot_img
HomeNewsவேட்டையன் படத்தின் கதை இதுதான் ; ரகசியம் உடைத்த ராணா

வேட்டையன் படத்தின் கதை இதுதான் ; ரகசியம் உடைத்த ராணா

ஜெய்பீம் இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். ஜெயிலரை போலவே இந்த படத்திலும் அமிதாப் பச்சன், ராணா, பஹத் பாசில், மஞ்சு வாரியர் என பல மொழிகளை சேர்ந்த நட்சத்திரங்கள் இந்த படத்திற்காக ரஜினியுடன் கூட்டணி சேர்ந்துள்ளனர்.

பாகுபலி படத்திற்கு பிறகு தமிழில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான காடன் படத்தில் நடித்த ராணா அதை தொடர்ந்து மீண்டும் வேட்டையன் படம் மூலம் தமிழுக்கு வந்துள்ளார். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த படம் பற்றி சில தகவல்களை ராணா பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில், “வழக்கமான ரஜினிகாந்த் படமாக இது இருக்காது. அது மட்டுமல்ல வேட்டையன் போன்ற ஒரு படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார் என்பது ஆச்சரியம். இந்த படம் நீதித்துறை, காவல்துறை மற்றும் தொழில்துறை சிஸ்டம் ஆகியவற்றை மையப்படுத்தி உருவாகி வருகிறது” என்று கூறியுள்ளார். அது மட்டுமல்ல நன்கு ஆய்வுகள் செய்யப்பட்டு அதன் அடிப்படையில் இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார் ராணா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img