spot_img
HomeNewsஇரட்டை சங்கடத்துடன் தனுஷ் போட்ட பதிவு

இரட்டை சங்கடத்துடன் தனுஷ் போட்ட பதிவு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஏற்கனவே 3. வை ராஜா வை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தற்போது லால் சலாம் என்கிற படத்தை இயக்கியுள்ளார். விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ள இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் வரும் பிப்ரவரி ஒன்பதாம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இதன் ட்ரெய்லர் வெளியானது. ரசிகர்கள் அனைவரையுமே இந்த ட்ரெய்லர் கவர்ந்துள்ளது. இந்த நிலையில் ஐஸ்வர்யாவை விட்டு பிரிந்து தனியாக வசிக்கும் நடிகர் தனுஷ் லால் சலாம் பட ட்ரெய்லருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அதாவது அவர் எப்போதுமே ஒரு ரஜினி ரசிகராகவே தன்னை இதுவரை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார். அவரது ஒவ்வொரு படங்களுக்கும் ரிலீசுக்கு முன்பாகவும் ரிலீசுக்கு பின்பும் மிகப்பெரிய அளவில் பதிவுகளை இட்டு வாழ்த்து சொல்லி வருகிறார்.

அதே சமயம் தனது மனைவி ஐஸ்வர்யாவுடனான பிரிவுக்குப் பிறகு அவர் இயக்கியுள்ள படம் தானே என வாழ்த்து சொல்லாமல் செல்லலாம் என பார்த்தால், தனது தலைவர் ரஜினிகாந்த் நடித்த படம் என்பதால் இது பற்றி ஏதாவது பதிவிட்டே ஆக வேண்டும்.. ரசிகர்களும் அதை எதிர்பார்ப்பார்கள். அப்படி செய்யவில்லை என்றால் அவருக்கு கெட்ட பெயர் தான் ஏற்படும்.

இதை உணர்ந்த தனுஷ் டிரைலருக்கு வாழ்த்து சொல்லி தலைவர் மற்றும் லால் சலாம் பட குழுவினர் என்று தான் குறிப்பிட்டுள்ளாரே தவிர தனது மனைவியின் பெயரை எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Must Read

spot_img