மறைத்து வைத்த காதலை நான்கு வருடங்கள் கழித்து வெளிச்சம் போட்டு காட்டிய தனுஷ் பட நாயகி
தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் கர்ணன். அந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் மலையாளத் திரை உலகைச் சேர்ந்த நடிகை ரஜிஷா விஜயன். அந்த படத்தை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஜெய்பீம் படத்திலும் ஒரு சமூக சேவகி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்போதும் சில படங்களில் நடித்து வருகிறார் ரஜிஷா விஜயன்.
இவரைப் பற்றி இதுநாள் வரை எந்த கிசுகிசுவும் வெளியானது இல்லை. ஆனாலும் கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு மேலாக ஒருவரை இவர் காதலித்து வந்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா ? ஆம் மலையாள ஒளிப்பதிவாளர் டோபின் தாமஸ் என்பவரை தான் இவர் இத்தனை வருட காலமாக காதலித்து வந்துள்ளார். தற்போது இவர்கள் இருவரும் நெருக்கமாக உள்ள புகைப்படத்தை இருவரும் வெளியிட்டு தங்களது காதலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.