spot_img
HomeNewsஇரண்டு நாட்கள் படப்பிடிப்புடன் சாக்சி அகர்வாலை கழட்டிவிட்ட விஜய்யின் ஆஸ்தான இயக்குனர்

இரண்டு நாட்கள் படப்பிடிப்புடன் சாக்சி அகர்வாலை கழட்டிவிட்ட விஜய்யின் ஆஸ்தான இயக்குனர்

தமிழ் சினிமாவில் நடிகை சாக்சி அகர்வால் சில படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் ஓரளவு பிரபலமாகி இருந்தார். அந்த சமயத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு வந்தது. அதேபோல ரஜினிகாந்த் நடித்த காலா படத்தில் அவரது மருமகளாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இந்த இரண்டும் சேர்த்து இவருக்கு இன்னும் மிகப்பெரிய அறிமுகத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தி கொடுத்தது.

அதே சமயம் இவர் சினிமாவில் நுழைந்த காலகட்டத்தில் அட்லீ முதல் முறையாக இயக்குனரான ராஜா ராணி படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு இவருக்குத்தான் வந்ததாம். அதாவது நஸ்ரியா நடித்த கதாபாத்திரம்.

இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்ற பின் மீண்டும் அழைக்கிறோம் என்று சொன்னார்களாம். ஆனால் அதற்கு பின் கூப்பிடவே இல்லை. அந்த படமும் ரிலீஸ் ஆகிவிட்டது. என்ன காரணமாக தன்னை கழட்டி விட்டார்கள் என தெரியவில்லை என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது வருத்தத்தை வெளிப்படுத்தி உள்ளார் சாக்சி அகர்வால்.

Must Read

spot_img