கடந்த சில வருடங்களுக்கு முன்பு வடிவேலு, விவேக் அவர்களின் காமெடி பற்றாக்குறை ஏற்பட்டபோது அதை ஈடு கட்டுவது போல சந்தானம், சூரி இருவரும் இரு துருவங்களாக கலக்கி வந்தனர். திடீரென சந்தானம் ஹீரோவாக மாறி விட்டார். இதனால் மற்ற ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக நடிப்பதையும் நிறுத்திவிட்டார்.
இதற்கு இடையே சில படங்களில் சூரி மட்டும் காமெடியனாக நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் அவரது படங்களும் வெளிவரவில்லை. பார்த்தால் அவரும் ஹீரோவாகிவிட்டார். சந்தானம் காமெடி ஹீரோ என்றால் சூரி சீரியஸ் ஹீரோவாக மாறினார்.
இவர்கள் இருவரும் ஹீரோக்களாக திசை மாறியதை தொடர்ந்து தற்போது யோகிபாபு, சதீஷ், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் காமெடி நடிகர்களாக நடித்து வருகின்றனர். இந்த பட்டியலில் தற்போது விஜய் டிவி காமெடி நடிகர் புகழ் இணைந்துள்ளார்.
இவரும் சில படங்களில் காமெடி நடிகராக நடித்தவர், தற்போது ஜூ கீப்பர் என்கிற படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார், இந்த படத்தை சுரேஷ் என்பவர் இயக்கியுள்ளார், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது,
யாரும் எதிர்பாராத விதமாக இந்த படத்திற்கு சம்பந்தமே இல்லாவிட்டாலும் கூட நடிகர் சூரி இந்த நிகழ்வில் கலந்து கொண்டு நடிகர் புகழை வாழ்த்தினார் சூரி. இந்த நிகழ்விற்கு சூரி வந்ததற்கு காரணம் நடிகர் புகழை வாழ்த்த வேண்டும் என்பதற்காகத்தான். இதுபற்றி புகழ் பேசும்போது தம்பிக்காக வருவேன் என வந்த சூரி அண்ணாவிற்கு நன்றி. என்று கூறினார்.
அதேபோல சூரியும் புகழை வாழ்த்தி பேசும்போது, “தம்பி புகழ் இன்னும் பல உச்சங்கள் செல்வான், அவனுக்கு வாழ்த்துகள். புகழிடம் நிறையத் திறமை இருக்கிறது. எல்லோர் வீட்டிலும் அவன் பெயர் நுழைந்துள்ளது. அவனிடம் நல்ல காமெடி சென்ஸ் உள்ளது. அவன் ஜெயிக்க வேண்டும் அதை விட அவன் நிலைக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்” என்று வாழ்த்தினார். திரையுலகை சேர்ந்தவர்கள் சூரியன் பெருந்தன்மையை பாராட்டி வருகின்றனர்,