தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராக அறிமுகமாகி துவக்க காலத்திலேயே அஜித், விஜய் என இருவரையும் வைத்து மாறி மாறி ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் எஸ் ஜே சூர்யா. அதன் பிறகு தனது கதைகளின் நடிக்க ஹீரோக்கள் கிடைக்காததால் தானே ஹீரோவாக மாறிவிட்டேன் எனக்கூறி தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாக நடித்து வந்தார்.
ஒரு கட்டத்தில் படங்களில் நடிக்கவும் வாய்ப்பு இல்லாமல் படம் இயக்கவும் வாய்ப்பு இல்லாமல் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார் என்று சொல்லலாம். அதன் பிறகு வில்லனாக சில படங்களில் நடிப்பில் வித்தியாசம் காட்டத் தொடங்கிய எஸ்.ஜே சூர்யா படிப்படியாக இன்று கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். வில்லனாகவும் நடித்து வருகிறார். அப்படி சமீபத்தில் அவர் நடித்த படங்கள் வரிசையாக வெற்றி பெற்று வருகின்றன.
இந்த நிலையில் அடுத்ததாக குக்கூ, ஜோக்கர் சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான ஜப்பான் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ராஜூ முருகன் டைரக்ஷனில் அவர் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் என ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இதை கேள்விப்பட்டு எஸ் ஜே சூர்யாவின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஏனென்றால் ஜோக்கர் என்கிற ஒரு படத்தை தவிர சொல்லிக் கொள்ளும்படியாக எந்த படத்தையும் ராஜூ முருகன் கொடுத்ததில்லை. குறிப்பாக கார்த்தியை வைத்து அவரது திரையுலக வரலாற்றிலேயே படு சொதப்பலான படமாக ஜப்பான் படத்தை இயக்கியிருந்தார். அப்படிப்பட்டவரிடம் போய் தேவையில்லாமல் சிக்கிக்கொள்ள வேண்டாம் என சோசியல் மீடியாவில் ரசிகர்கள் எஸ்.ஜே சூர்யாவிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.