spot_img
HomeNewsபிரபல ஹீரோவின் மகள் பெயரில் போலி அக்கவுண்ட்

பிரபல ஹீரோவின் மகள் பெயரில் போலி அக்கவுண்ட்

சினிமாவில் நடிக்கும் பிரபலங்கள் சோசியல் மீடியாவில் பிஸியாக இருக்கிறார்களோ இல்லையோ அவர்களது வாரிசுகள் பல பேர் தங்கள் விருப்பப்படி சோசியல் மீடியாவில் சுதந்திரமாக கருத்துக்களை புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிகர் அஜித், விஜய், சூர்யா ஆகியோரின் வாரிசுகள் இருக்கும் இடமே தெரியாமல் இருக்கின்றனர்.

அதே சமயம் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் மகேஷ்பாபுவின் மகள் சித்தாரா சோசியல் மீடியாவில் சுறுசுறுப்பாக வலம் வருகிறார். குறிப்பாக தன்னுடைய தந்தை உள்ளிட்ட குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் சில வீடியோக்கள் ஆகியவற்றை தொடர்ந்து சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் யாரோ ஒருவர் இவரது பெயரில் போலி சமூக வலைதள கணக்கு ஒன்றைத் துவங்கி தேவையில்லாத தகவல்களை பதிவிட்டு அவருக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தி தர முயன்றுள்ளார். இந்த தகவல் தெரிய வந்ததும் மகேஷ்பாபு தரப்பில் இருந்து காவல்துறையில் புகார் தரப்பட்டு மோசடி நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து விளக்கம் அளிக்கும் விதமாக சித்தாராவிற்கு உள்ள ஒரே ஒரு ஒரிஜினல் கணக்கு இது மட்டும் தான் வேறு எந்த கணக்கும் எங்களுக்கு இல்லை என்று உண்மையான சோசியல் மீடியா அக்கவுண்ட் கணக்கையும் வெளியிட்டுள்ளனர்.

Must Read

spot_img