spot_img
HomeNewsஆந்திராவில் லால் சலாமை கைவிட்ட ரஜினி ரசிகர்கள் ; பல இடங்களில் காட்சிகள் ரத்து

ஆந்திராவில் லால் சலாமை கைவிட்ட ரஜினி ரசிகர்கள் ; பல இடங்களில் காட்சிகள் ரத்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தற்போது வெளியாகி உள்ள படம் லால் சலாம். அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக அல்லாமல் சிறப்பு தோற்றத்தில் தான் நடித்துள்ளார். அதே சமயம் குறைவான நிமிடங்களே வரும் காட்சிகளில் அவர் நடித்து இருந்தாலும் படம் முழுவதும் வருவதுபோல அவரது கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும் இந்த படத்தின் கதாநாயகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகிய இருவர் தான் என ஆரம்பத்தில் இருந்த பிரமோஷன் செய்யப்பட்டு வருகிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் கூட இதை ஒரு ரஜினி படம் வருகிறது என்கிற எதிர்பார்ப்பில் பார்க்கவில்லை.

அதனால் தான் தெலுங்கில் இந்த படம் வெளியான போதும் அதை ரஜினி படம் என ரசிகர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளாததால் பல திரையரங்குகளில் காட்சிகளை திரையிட போதுமான ரசிகர்கள் இல்லாததால் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் பார்வையாளர்களிடம் பெறப்பட்ட பணம் திருப்பிக் கொடுக்கப்பட்ட அதிர்ச்சிகரமான நிகழ்வுகளும் நடந்துள்ளன.

ரஜினி ஹீரோவாக நடிக்கும் படம் என்றால் ஒரு மாதிரியும் அவர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் படம் என்றால் ஒரு மாதிரியும் அவரது ரசிகர்களே பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் என்பது ஆச்சரியம் தான்.

Must Read

spot_img