spot_img
HomeNewsவிஜய் ஆண்டனி படத்தில் நடக்காத அதிசயம் விஜய் படத்திலாவது நடக்கட்டும்

விஜய் ஆண்டனி படத்தில் நடக்காத அதிசயம் விஜய் படத்திலாவது நடக்கட்டும்

சினிமா அரசியல் என இரண்டிலுமே பொதுமக்களிடம் நல்ல பெயர் வாங்கியவர் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த். கடந்த பல வருடங்களாக உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாத இறுதியில் காலமானார்.

அவர் கடைசியாக தனது மகன் சண்முக பாண்டியன் அறிமுகமான சகாப்தம் என்கிற படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் மட்டும் நடித்திருந்தார். அதன் பிறகு அவர் படங்களில் நடிக்கவே இல்லை. இந்த நிலையில் ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான விஜய் மில்டன், நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் சரத்குமார் இருவரையும் இணைத்து இயக்கி வரும் மழை பிடிக்காத மனிதன் என்கிற படத்தில் முக்கிய வேடத்தில் விஜயகாந்தை நடிக்க வைக்க போகிறேன் என கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே கூறியிருந்தார்.

விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத நிலையில் எப்படி அவரை நடிக்க வைக்கப் போகிறார் என்கிற சந்தேகம் அனைவருக்குமே எழுந்தது. ஆனாலும் அதற்கு முன்னதாகவே விஜயகாந்த் இவ்வுலகை விட்டு சென்று விட்டார். இந்த நிலையில் நடிகர் விஜய் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் கோட் படத்தில் விஜயகாந்தை நடிக்க வைக்க இருக்கிறார்களாம்.

ஆச்சரியப்பட வேண்டாம். இப்போது அதற்கான தொழில் நுட்பங்கள் எல்லாம் நிறையவே வந்து விட்டன. இதற்காக விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மற்றும் அவரது மகன்களிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாம்.. விஜயகாந்தின் கதாபாத்திரத்தை எப்படி உருவாக்குகிறீர்கள் படத்தில் எப்படி அவரை காட்டப் போகிறீர்கள் என்பதை எங்களிடம் காட்டி, நாங்கள் அனுமதி தந்த பின்பு படத்தில் அவரது காட்சிகளை சேர்க்க வேண்டும் என்கிற நிபந்தனையுடன் இதற்கு சம்மதித்து உள்ளார்களாம்.

விஜய்யை அவர் அறிமுகமான காலகட்டத்தில் பட்டி தொட்டி எல்லாம் தனது செந்தூரப்பாண்டி படம் மூலமாக கொண்டு சேர்த்தவர் கேப்டன் விஜயகாந்த். அதன்பிறகு கேப்டன் விஜயகாந்த்துக்கு இதுவரை எந்த நன்றி கடனும் பெரிய அளவில் செய்திராத விஜய் இப்போது இறந்து போன அவரை தனது படத்தில் நடிக்க வைத்து பிராயச்சித்தம் தேடிக் கொள்கிறார் என்றே சொல்லலாம்.

Must Read

spot_img