spot_img
HomeNewsதேசிய விருதுக்கு ஆசைப்படாத திருடர்கள்

தேசிய விருதுக்கு ஆசைப்படாத திருடர்கள்

காக்கா முட்டை என்கிற தனது முதல் படத்தின் மூலமே மிகப்பெரிய அதிர்வலைகளை தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியவர் இயக்குனர் மணிகண்டன். இந்த படத்தில் நடித்ததன் மூலம் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மிகப்பெரிய அளவில் முன்னணி நடிகையாக உயர்ந்தார் இந்த படத்தின் இயக்குனர் மணிகண்டன் இதைத் தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

இவர் இயக்கிய படங்களுக்கு தேசிய விருதுகள், சர்வதேச விருதுகள் உள்ளிட்ட பல விருதுகள் தேடி வந்து கௌரவப்படுத்தின. இந்த நிலையில் சமீபத்தில் இவரது வீட்டில் நகை பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்கள் கூடவே வீட்டில் இருந்த இவருக்கு கிடைத்த தேசிய விருது பதக்கங்களையும் கொள்ளையடித்து சென்றனர்.

இது குறித்து சமீப நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் இதில் எதிர்பாராத திருப்பமாக கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்கள் பதக்கங்களை மட்டும் திரும்பவும் கொண்டுவந்து மணிகண்டன் வீட்டின் முன் போட்டுவிட்டு உங்கள் உழைப்பு உங்களுக்கே என்று கூறி சென்றுள்ளனர்.

நல்ல மனம் படைத்த திருடர்கள் தான் என்றாலும் உங்கள் உழைப்பு உங்களுக்கு என்று சொன்ன அவர்களுக்கு, அந்த பணமும் நகையும் கூட மணிகண்டனின் உழைப்பு தான் என்பது தெரியாமல் போனதே ?

Must Read

spot_img